Asianet News TamilAsianet News Tamil

பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டல்… விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி கைது!!

அரியலூரில் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி முத்துவேல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

vhp member arrested for demanding money from school principal at ariyalur
Author
First Published Mar 14, 2023, 9:02 PM IST

அரியலூரில் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி முத்துவேல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அரியலூர் தேவாலயத்தின் ஒன்றில் பாதிரியாராக இருந்து வருபவர் டோமினிக் சாவியே. இவர் ஆர்.சி.பள்ளியில் தாளாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் டோமினிக் சாவியேவுக்கு எதிராகவும் அவர் நடத்தி வரும் பள்ளிக்கு எதிராகவும் செயல்பட்டு வந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்ட செயலாளர் முத்துவேல் என்பவர் ஏற்கனவே தஞ்சை பள்ளியில் படித்த மாணவி மதமாற்றம் செய்யக்கோரி வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர்.

இதையும் படிங்க: காட்டு யானையுடன் செல்பி எடுக்க முயன்ற வாலிபரை மிதித்து கொன்ற யானை

இந்த நிலையில் இவர், அரியலூர் பள்ளிக்கூடங்களில் இந்துப் பெண்களை வன்கொடுமை செய்யும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளைப் படிக்கவைக்கும் இந்துக்களே உஷார். உங்கள் பிள்ளைகளைக் கிறிஸ்தவப் பள்ளிகளில் சேர்க்காதீர்கள் என்று பிளக்ஸ் அடித்து அரியலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே வைக்கவும் தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யவும் விஷ்வஹிந்து பரிஷத்தின் அரியலூர் மாவட்டச் செயலாளரான முத்துவேல் என்பவர் முயற்சிப்பதாககூறி, வினோத் என்பவர் டோமினிக்கிடம் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: புக்கர் பரிசு நெடும்பட்டியலில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவல்

இதுக்குறித்து டோமினிக் பேசுகையில் முத்துவேல் அவரிடம் 25 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதை அடுத்து முத்துவேல் பணம் கேட்டு மிரட்டி வெளியிட்ட ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் தகாத வார்த்தைகளில் பேசியதோடு, பணத்திற்கு பேரம் பேசுவதும் தெரிகிறது. இதை அடுத்து 25 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்ட செயலாளர் முத்துவேலை அரியலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios