Bodies cremated
கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து இறந்த தாய் மற்றும் 2 மகள்கள் உடல்கள் இன்று எரியூட்டப்பட்டன
நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதி, அட்சயா. இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று தீக்குளித்தனர்.
கந்துவட்டிக் கொடுமையால் நால்வரும் தீக்குளித்ததாக அவரது சகோதரர் கோபி தெரிவித்தார்.
70 சதவீதத்துக்கும் மேலான தீக்காயங்களுடன் நெல்லை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி, அட்சயா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இசக்கிமுத்து மட்டும் உயிருக்குப் போராடி வருகிறார்.
இந்நிலையில், தீக்குளித்து இறந்த தாய் மற்றும் 2 மகள்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக இறந்தவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர். இசக்கிமுத்துவின் தம்பி கோபியிடம் வலுக்கட்டாயமாக உடலை போலீசார் ஒப்படைத்தனர். வாங்காவிட்டால் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனை அடுத்து மூன்று உடல்களும், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்லாமல், சிந்துபூந்துறையிலுள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது.
