Asianet News TamilAsianet News Tamil

பொய் சொல்றதுல திமுக ஐடி விங்கையே மிஞ்சிட்டீங்க; சபாநாயகருக்கு எதிராக எஸ்ஆர் சேகர் ஆவேசம்

பொய்களையும், புரட்டுகளையும் பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதில் திமுகவின் ஐடி விங்கையே மிஞ்சும் அளவுக்கு தமிழக சபாநாயகர் அப்பாவு அவர்கள் பேசி உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.

BJP State Treasurer SR Shekhar criticizes Speaker Appavu vel
Author
First Published Aug 30, 2024, 4:37 PM IST | Last Updated Aug 30, 2024, 5:26 PM IST

தமிழக பாஜக மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் வெளியிட்டுள்ள பதிவில், “யாரோ ஒரு முகம் தெரியாத fake id சமூக வலைத்தளங்களில் பொய்களையும் புரட்டுகளையும் பரப்புவதே இந்தக் காலத்தில் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ள நிலையில், சபாநாயகர் என்ற மிக உயரிய பொறுப்பில் அமர்ந்து கொண்டு, அதற்கு துளியும் சம்பந்தம் இல்லாத வகையில் புரளி செய்திகளை அப்பாவு  அவர்கள் பேசியது, அந்தப் பதவிக்கான மாண்பையே குறைக்கும் வகையில் உள்ளது !

பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் தமிழகத்தில் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது தமிழக அரசு தான். ஸ்ரீ பள்ளிகளின் என்பது புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சம் என்பதும் தமிழக அரசுக்கு நன்றாகவே தெரியும் !! புதிய கல்விக் கொள்கையில் இணையாமல் ஸ்ரீ பள்ளிகள் மட்டும் எங்களுக்கு வேண்டும் என்று கேட்பது மக்களை திசை திருப்பும் செயல் மட்டும் தான் ! ரேஷன் கடையில் எனக்கு அரிசி மட்டும் வேண்டும், மற்றதெல்லாம் எனக்கு தேவையில்லை, அதனால் எனக்கு ரேஷன் கார்டு வேண்டாம் என்று சொன்னால் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளுமா ??

ரேஷன் கார்டைப் பெற்றுக் கொண்டு, உனக்கு என்னென்ன பொருள் தேவையோ அதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று தானே சொல்வார்கள் ?? அது போல தான் புதியக் கல்விக் கொள்கையின் ஒரு அம்சமாக இருக்கும் ஸ்ரீ பள்ளிகள் வேண்டும் என்று தமிழக அரசு கேட்டால், புதிய கல்விக் கொள்கையில் இணைந்த மாநிலங்களுக்கு மட்டும் தான் வழங்க முடியும் என்று மத்திய அரசு கேட்பது நியாயம் தானே ?

இந்த எளிய உண்மையை மக்களிடம் மறைத்து, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் இணைய கட்டாயப்படுத்துகிறது என்று கூறி வருகின்றனர் திமுகவினர். புதிய கல்விக் கொள்கையில் கட்டாயம் என்ற வார்த்தைக்கே இடம் இல்லை !! எல்லாவற்றையும் கட்டாயப்படுத்தி மாநிலங்கள் மீது திணிப்பதற்கு இது என்ன காங்கிரஸ் அரசா ? ஒரு அரசாங்க அதிகாரி, தன்னுடைய கையெழுத்தைக் கூட ஹிந்தியில் போட வேண்டும் என்று திணித்த காங்கிரசோடு கூட்டணி வைத்துக் கொண்டு.... புதிய கல்விக் கொள்கை இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கிறது என்று வாய் கூசாமல் கூறி இருக்கிறார் அப்பாவு !

நாட்டில் 10 கோடிக்கு மேல் தமிழ் பேசும் மக்கள் உள்ளனர் என்றும்... சமஸ்கிருதம் பேசுவோர் 25 ஆயிரம் பேர் தான் இருப்பார்கள் என்றும்... அந்த மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என்பது நியாயமா என்று அப்பாவி தனமாக கேள்வி கேட்டிருக்கிறார் அப்பாவு. இதனால் தான் தமிழக முதல்வர் சமஸ்கிருதம் தேவையில்லை என்கிறாராம்... தமிழக முதல்வர் மட்டுமல்ல சபாநாயகரே.... ஒட்டுமொத்த புதிய கல்விக் கொள்கையே அதை தான் கூறுகிறது....

தமிழ்நாட்டில் சில பள்ளிகளில் தாய்மொழியான தமிழைப் பேசினால் கூட அபராதம் விதிக்கும் நிலை இருக்கும் பொழுது.... யாருக்கும் அஞ்சாமல் தாய்மொழியை கற்க வேண்டும் என்று தாய் மொழியை கட்டாயமாக்குவது தான் புதிய கல்விக் கொள்கை !! வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்போம் என்பதுதான் இந்தியாவின் கொள்கை !! இந்தியாவின் பன்முகத் தன்மையை ஆராதிப்பது தான் புதிய கல்விக் கொள்கை !!

தமிழ் கன்னடம் தெலுங்கு சமஸ்கிருதம் ஹிந்தி மலையாளம் ஒடியா போன்ற செம்மொழிகளில் ஏதேனும் ஒன்றை மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று, மாணவர்களுக்கான சுதந்திரத்தை கொடுப்பதுதான் புதிய கல்விக் கொள்கை !! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் குடியின் கொள்கைக்கு ஏற்ப உலகம் முழுக்க இணைப்பு மொழியாக இருக்க ஒரு அந்நிய மொழியை கற்க வழி செய்வதுதான் புதிய கல்விக் கொள்கை !!

நியாயமாக பார்த்தால் ஹிந்தி பேசும் மாநிலங்களில் கூட, தமிழ் மலையாளம் கன்னட ஒடியா போன்ற தென் மாநிலங்களில் மொழியை மாணவர்கள் பயில வாய்ப்பு அளித்திருக்கிறது புதிய கல்விக் கொள்கை !! தமிழ் மொழியை வட இந்தியர்களுக்கும் கொண்டு போய் சேர்க்கும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது புதிய கல்விக் கொள்கை !! இந்தியா முழுக்க இருக்கும் பல்வேறு மொழிகளை, அனைத்து தரப்பு மாநில மாணவர்களும் கற்பதற்கு வழி வகுக்கிறது புதிய கல்விக் கொள்கை !!

பொய் புரட்டு பரப்புவதில் திமுக ஐடி விங்கை விஞ்சும் சபாநாயகர் ? 

பொய்களையும் புரட்டுகளையும் பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதில் திமுகவின் ஐடி விங் எவ்வளவு சாமர்த்தியமானவர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் எல்லாம் மிஞ்சும் அளவுக்கு தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு அவர்கள் பேசி இருப்பதைப் பார்த்தால் அதிர்ச்சி ஏற்படுகிறது ! யாரோ ஒரு முகம் தெரியாத fake id சமூக வலைத்தளங்களில் பொய்களையும் புரட்டுகளையும் பரப்புவதே இந்தக் காலத்தில் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ள நிலையில்.... சபாநாயகர் என்ற மிக உயரிய பொறுப்பில் அமர்ந்து கொண்டு, அதற்கு துளியும் சம்பந்தம் இல்லாத வகையில் புரளி செய்திகளை அப்பாவு  அவர்கள் பேசியது, அந்தப் பதவிக்கான மாண்பையே குறைக்கும் வகையில் உள்ளது !

பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் தமிழகத்தில் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது தமிழக அரசு தான். ஸ்ரீ பள்ளிகளின் என்பது புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சம் என்பதும் தமிழக அரசுக்கு நன்றாகவே தெரியும் !! புதிய கல்விக் கொள்கையில் இணையாமல் ஸ்ரீ பள்ளிகள் மட்டும் எங்களுக்கு வேண்டும் என்று கேட்பது மக்களை திசை திருப்பும் செயல் மட்டும் தான் ! ரேஷன் கடையில் எனக்கு அரிசி மட்டும் வேண்டும், மற்றதெல்லாம் எனக்கு தேவையில்லை, அதனால் எனக்கு ரேஷன் கார்டு வேண்டாம் என்று சொன்னால் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளுமா ??

ரேஷன் கார்டைப் பெற்றுக் கொண்டு, உனக்கு என்னென்ன பொருள் தேவையோ அதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று தானே சொல்வார்கள் ?? அது போல தான் புதியக் கல்விக் கொள்கையின் ஒரு அம்சமாக இருக்கும் ஸ்ரீ பள்ளிகள் வேண்டும் என்று தமிழக அரசு கேட்டால், புதிய கல்விக் கொள்கையில் இணைந்த மாநிலங்களுக்கு மட்டும் தான் வழங்க முடியும் என்று மத்திய அரசு கேட்பது நியாயம் தானே ?

புதிய கல்விக் கொள்கையில் கட்டாயம் என்ற வார்த்தைக்கே இடம் இல்லை !! எல்லாவற்றையும் கட்டாயப்படுத்தி மாநிலங்கள் மீது திணிப்பதற்கு இது என்ன காங்கிரஸ் அரசா ? ஒரு அரசாங்க அதிகாரி, தன்னுடைய கையெழுத்தைக் கூட ஹிந்தியில் போட வேண்டும் என்று திணித்த காங்கிரசோடு கூட்டணி வைத்துக் கொண்டு.... புதிய கல்விக் கொள்கை இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கிறது என்று வாய் கூசாமல் கூறி இருக்கிறார் அப்பாவு !

நாட்டில் 10 கோடிக்கு மேல் தமிழ் பேசும் மக்கள் உள்ளனர் என்றும்... சமஸ்கிருதம் பேசுவோர் 25 ஆயிரம் பேர் தான் இருப்பார்கள் என்றும்... அந்த மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என்பது நியாயமா என்று அப்பாவி தனமாக கேள்வி கேட்டிருக்கிறார் அப்பாவு. இதனால் தான் தமிழக முதல்வர் சமஸ்கிருதம் தேவையில்லை என்கிறாராம்... தமிழக முதல்வர் மட்டுமல்ல சபாநாயகரே.... ஒட்டுமொத்த புதிய கல்விக் கொள்கையே அதை தான் கூறுகிறது....

தமிழ்நாட்டில் சில பள்ளிகளில் தாய்மொழியான தமிழைப் பேசினால் கூட அபராதம் விதிக்கும் நிலை இருக்கும் பொழுது.... யாருக்கும் அஞ்சாமல் தாய்மொழியை கற்க வேண்டும் என்று தாய் மொழியை கட்டாயமாக்குவது தான் புதிய கல்விக் கொள்கை !! தமிழ் கன்னடம் தெலுங்கு சமஸ்கிருதம் ஹிந்தி மலையாளம் ஒடியா போன்ற செம்மொழிகளில் ஏதேனும் ஒன்றை மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று, மாணவர்களுக்கான சுதந்திரத்தை கொடுப்பதுதான் புதிய கல்விக் கொள்கை !!

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் குடியின் கொள்கைக்கு ஏற்ப உலகம் முழுக்க இணைப்பு மொழியாக இருக்க ஒரு அந்நிய மொழியை கற்க வழி செய்வதுதான் புதிய கல்விக் கொள்கை !! நியாயமாக பார்த்தால் ஹிந்தி பேசும் மாநிலங்களில் கூட, தமிழ் மலையாளம் கன்னட ஒடியா போன்ற தென் மாநிலங்களில் மொழியை மாணவர்கள் பயில வாய்ப்பு அளித்திருக்கிறது புதிய கல்விக் கொள்கை !! தமிழ் மொழியை வட இந்தியர்களுக்கும் கொண்டு போய் சேர்க்கும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது புதிய கல்விக் கொள்கை !!

இந்தியா முழுக்க இருக்கும் பல்வேறு மொழிகளை, அனைத்து தரப்பு மாநில மாணவர்களும் கற்பதற்கு வழி வகுக்கிறது புதிய கல்விக் கொள்கை !! ஆனால் அது சமஸ்கிருதத்தை மட்டும் திணிக்கிறது என்று இவர்கள் வசதிக்கு மாற்றி பேசுவது வெறும் அரசியல் லாபத்திற்காக மட்டும்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios