உண்டியல் குலுக்கி! மரியாதையை காப்பாற்றிக்கொள்ளுங்கள்! சு.வெங்கடேசனை சுளுக்கு எடுத்த சூர்யா! வரவேற்ற சீதாராமன்!

தைப்பொங்கல் அன்று CA தேர்வு நடத்தப்படுவதற்கு எம்.பி. சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக-வின் எஸ்.ஜி.சூர்யா கடுமையாக விமர்சித்துள்ளார். 

BJP State Secretary SG Suryah slams Su Venkatesan Tvk

தை பொங்கல் அன்று பட்டயக் கணக்காளர் தேர்வு (CA) நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கு மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் இதற்கு கண்டனம் தெரிவித்து வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியிருந்தார். 

இதுதொடர்பாக  சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில்: பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு...

BJP State Secretary SG Suryah slams Su Venkatesan Tvk

சி.ஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. “அறுவடைத் திருநாளான" பொங்கல் திருவிழா என்பது  தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு ஒன்றிய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் ICAI தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வால் அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் சு.வெங்கடேசனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எஸ்.ஜி.சூர்யா கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநில செயலாளரான எஸ்.ஜி.சூர்யா வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சு.வெங்கடேசன் இப்படி எங்காவது மாட்டுவாப்லனு தெரியுமே! கதை எழுதுபவருக்கு Professional Courses குறித்து என்ன தெரியும்? அதெல்லாம் படித்து தேர்ச்சி பெறுபவர்கள் domain. தங்களுக்கு எதற்கு இதெல்லாம்? சரி விஷயத்துக்கு வருவோம்.

 

பொங்கல் தமிழகம் மட்டும் கொண்டாடும் பண்டிகையா? 24 மணிநேரமும் பொய் பேசுவதற்கு பதில் மற்ற மாநில கம்யூனிஸ்டுகளிடம் கேட்டு பொது அறிவை வளர்த்துக்கொள்ளலாமே? இதே பொங்கல் தான் பிற மாநிலங்களில் மகர சங்கராந்தி, வட இந்தியாவில் லோஹ்ரி, உ.பி-யில் கிச்சடி, குஜராத் & ராஜஸ்தானில் உத்தராயணி, ஹரியானா & பஞ்சாபில் மாஹி, வடகிழக்கு மாநிலங்களில் பிஹு என கொண்டாடப்படுகிறது. முதலில் பிரிவினை பேசுவதற்கு முன் பொங்கல் என்பது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு தேசிய பண்டிகை என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அப்படியெனில் இது எப்படி தமிழருக்கு மட்டும் எதிரானதாகும்? எம்.பி என்பதால் பாராளுமன்ற கேண்டீனில் 24 மணி நேரமும் உட்கார்ந்து பெஞ்சு தேய்க்காமல் நாலு பேருடன் பேசியிருந்தால் அடிப்படை அறிவு கிஞ்சித்தேனும் வளர்ந்திருக்குமே? இரண்டாவதாக, CA தேர்வு தேதிகளை முடிவு செய்வது மத்திய அரசோ, நிதி அமைச்சகமோ இல்லை. அது தன்னாட்சி பெற்ற ICAI எனும் அமைப்பு. அதற்கு பல்வேறு அளவுகோள் உள்ளது. உதாரணமாக கம்யூனிஸ்ட் கட்சி கூட்டமெனில் 10 பேர் கூட வர மாட்டார்கள்; so எப்போது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால், CA தேர்வு என்பது லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு, எதிர்காலம் - எனவே பல்வேறு factors-ஐ கருத்தில் கொண்டு தான் தேர்வு தேதிகளை முடிவு செய்ய முடியும்.

BJP State Secretary SG Suryah slams Su Venkatesan Tvk

மூன்றாவதாக, Professional Courses-க்கான தேர்வுகளுக்கு இத்தகைய விடுமுறை நாட்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பது அதை கஷ்டப்பட்டு படிப்பவர்களுக்கு தான் தெரியும். தங்களை போன்ற உண்டியல் குலுக்குகளுக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை. தாங்கள் 7 ஜெனமம் எடுத்தாலும் இந்தியாவில் உள்ள ஒரு Professional Course-ஐ கூட படித்து தேர்ச்சி பெற முடியாது; அவர்கள் வாழ்க்கையில் விளையாடி அரசியல் செய்ய நினைத்தால் அந்த கனவு பலிக்காது!

BJP State Secretary SG Suryah slams Su Venkatesan Tvk

சரி இதை சொல்ல எனக்கு என்ன உரிமை இருக்கிறது. நானும் இதேபோன்றொரு Professional Course-ஐ கஷ்டப்பட்டு படித்து.. படித்து(உண்டியல் குலுக்கி அல்ல!) தேர்ச்சி பெற்றவன். அதனால் சொல்கிறேன் மரியாதையை(அப்படி ஒன்று தங்களுக்கு இருப்பதாக தாங்கள் கருதினால் மட்டும்(!)) காப்பாற்றிக் கொள்ளவும் என்று  எஸ்.ஜி.சூர்யா காட்டமாக கூறியுள்ளார். 

 

இதனிடையே எஸ்.ஜி.சூர்யாவின் பதிவை பகிர்ந்துள்ள மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா அவர்களே. எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் “தமிழ் விரோதி” ப்ரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும் என்று கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios