Annamalai : ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் தோல்வி.. நேரில் பார்த்து ரசித்த அண்ணாமலை
சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் சன்ரைசஸ் ஐதராபாத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது. இந்த போட்டியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் பார்த்து ரசித்தார்.
வாக்கு வேட்டையில் அண்ணாமலை
நாடாளுமன்ற தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 7ஆம் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனிடையே தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பாஜகவிற்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தார். டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி கட்ட பிரச்சாரத்திலும் தமிழர்கள் வாழும் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் தோல்வி
இந்தநிலையில் சென்னையில் நேற்று ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. முதலில் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியாக 113 ரன்கள்மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 114 ரன்களை எளிதாக எடுத்து வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர். இதேபோல தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் ஐபிஎஸ் இறுதி போட்டியை கண்டு ரசித்தார்.
இறுதி போட்டியை நேரில் பார்த்த அண்ணாமலை
இந்த புகைப்படத்தை பதிவிட்டு வரும் அண்ணாமலை ஆதரவாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் முடிவோடு இணைத்து பதிவிட்டு வருகின்றனர். இன்றைய சன்ரைசர்ஸ் தோல்வி ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு முன்னோட்டம் என பதிவிட்டுள்ளனர். இதற்கு திமுகவினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.