- Home
- Gallery
- 21 வயது தான் ஆகுது – பிறந்தநாளன்று வளர்ந்து வரும் வீரருக்கான எமர்ஜிங் பிளேயர் விருது வென்ற நிதிஷ் ரெட்டி!
21 வயது தான் ஆகுது – பிறந்தநாளன்று வளர்ந்து வரும் வீரருக்கான எமர்ஜிங் பிளேயர் விருது வென்ற நிதிஷ் ரெட்டி!
ஐபிஎல் 2024 தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு வளர்ந்து வரும் வீரருக்கான எமர்ஜிங் பிளேயர் விருது வழங்கப்பட்டுள்ளது.

Emerging Player of the Season award
ஒரு வழியாக ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா நிறைவு பெற்றுள்ளது. பிசிசிஐயின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகரமாக ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 திருவிழா கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக தொடங்கியது.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
இந்த தொடரில் 10 அணிகள் இடம் பெற்று விளையாடிய நிலையில் கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில், ஆர்சிபி எலிமினேட்டரில் வெளியேற, ஆர்ஆர் அணி 2ஆவது குவாலிஃபையர் சுற்றுடன் வெளியேறியது.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்தார்.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைவான ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் படைத்துள்ளது. பின்னர் எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழக்க, ரஹ்மானுல்லா குர்பாஸ் 39 ரன்களில் வெளியேறினார்.
KKR vs SRH IPL Final 2024
இறுதியாக வெங்கடேஷ் ஐயர் 52 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களும் எடுக்கவே 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி பெற்று 3ஆவது முறையாக சாம்பியனானது. சாம்பியனான கேகேஆர் அணிக்கு ரூ.20 கோடிக்கான காசோலையும், ஐபிஎல் டிராபியும் வழங்கப்பட்டது.
KKR vs SRH, IPL 2024
இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு வளர்ந்து வரும் வீரருக்கான எமர்ஜிங் பிளேயர் விருது வழங்கப்பட்டது. அதோடு, ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று தான் தனது 21ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்கள் உள்பட 303 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 14 பவுண்டரி, 21 சிக்ஸர்கள் அடங்கும். அதிகபட்சமாக 76* ரன்கள் எடுத்தார்.