திமுகவினர் சாமியை பார்ப்பது இல்லை, பின்னாடி உள்ள உண்டியலை தான் பார்ப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

கோயிலில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை ?

திமுக ஆட்சி அமைந்து ஒரு வருட காலம் முடிவடைந்துள்ள நிலையில், திமுக- பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. திமுக அரசின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறது. இதன் காரணமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது திமுக மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தநிலையில் அதீனங்கள் அரசியல் பேச கூடாது என்கிறார்கள், அரசியலை நாங்கள் பேசாமல் யார் பேசுவது என மதுரை ஆதினம் கேள்வி எழுப்பியிருந்தார். அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை, அரசியல்வாதிகள் கோவிலில் தர்க்காராக வந்து இருந்து கொள்கிறார்கள். கோவிலுக்குள் அரசியல் புகுந்துவிட்டது. ஆன்மீகவாதிகள் ஏன் அரசியல் பேச கூடாது, திருக்கோவில் சொத்துக்கள் தொலைந்து போகிறது, நகையை உருக்குவது கூறுகிறார்கள் எங்கு உருக்குகிறார்கள் என தெரியவில்லை என மதுரை ஆதினம் விமர்சித்து இருந்தார். இதற்கு தமிழக அமைச்சர் சேகர்பாபுவும் பதிலடி கொடுத்து இருந்தார். 

உண்டியல் மீது திமுகவிற்கு கண்

இந்தநிலையில் மதுரையில் பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆதினங்கள் என்ன தவறாக பேசினார்கள் சரியாகத்தான் பேசியுள்ளார்கள், திமுகவினருக்கு சாமி மீது கண் இல்லை கோயிலில் உள்ள உண்டியல் மீது தான் கண் என விமர்சித்தார். இது ஆதினங்களுக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கே தெரிந்த உண்மை என கூறினார். பதுங்குவது பாய்வதற்கு என அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார், நாங்கள் என்ன விலங்குகளா? இப்படியே டயலாக் பேசிய திமுக ஆட்சி நடத்துவதாக அண்ணாமலை விமர்சித்தார். தொடர்ந்து பேசியவர், ஆர்.எஸ் பாரதிக்கு ஜாதகம் நன்றாக இருப்பதாகவும் அவர் மீது கை வைத்தால் ஜெயலிக்கு போக நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். கடவுளை நம்ப மாட்டீங்க ஆனால் ஜாதகத்தை மட்டும் நம்புகிறீர்களா என விமர்சித்தார். இந்த நேரத்தில் திமுகவினருக்கு தான் கூறிக்கொள்வது ஆதினத்தை மட்டும் தொட்டுப்பாருக்கள் மதுரை மக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெரியவரும் கூன கூறினார். மக்கள் தான் முதலில் வருவார்கள் இதற்க்கு அடுத்து இரண்டாவதாக பிஜேபியும், மூன்றாவதாக பிரதமரும் வருவார்கள் என தெரிவித்தார். ஆதினங்கள் மக்கள் பக்கம் உள்ளனர், அதனால் பாஜக ஆதினங்கள் பக்கம் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.