சீசன் அரசியல்வாதி கமல்ஹாசன்.. போட்டு தாக்கும் ரங்கநாயகுலு.!
கமல் மக்களவை தொகுதியில் போட்டியிடவில்லை என்பதும் மாறாக மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என்று திமுகவில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், பாஜக ஊடகப்பிரிவு மாநில தலைவர் ரங்கநாயகுலு கமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடாமல் ராஜ்யசபா சீட் வாங்கிய கமல்ஹாசனை பாஜக ஊடகப்பிரிவு மாநில தலைவர் ரங்கநாயகுலு விமர்சித்துள்ளார்.
திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணையும் பட்சத்தில் அவருக்கு கோவை மக்களவை தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்தார். அப்போது கமல் மக்களவை தொகுதியில் போட்டியிடவில்லை என்பதும் மாறாக மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என்று திமுகவில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், பாஜக ஊடகப்பிரிவு மாநில தலைவர் ரங்கநாயகுலு கமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக ஊடகப்பிரிவு மாநில தலைவர் ரங்கநாயகுலு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல் போட்டியிடும் 0/40 போனஸ் 1 மாநிலங்களை எம்.பி, உங்கள் பதவிக்காக நீங்கள் கட்சி மற்றும் உறுப்பினர்களை திமுக கூட்டணிக்கு என்று உறுதியளித்துள்ளீர்கள். ஒரு சீசன் அரசியல்வாதி போல கமல்ஹாசன் நல்ல செயல்திறனோடு இருக்கிறார். உங்கள் தொழிலில் கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.