Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தின் தலைநகரை சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்றனும்.! பாஜக எம்எல்ஏக்கு துரைமுருகன் அதிரடி பதில்

சென்னையில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் தலைநகராக திருச்சியை மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்த நிலையில், தலைநகர் டெல்லியை சென்னைக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

BJP MLA demand to shift the capital of Tamil Nadu to Trichy KAK
Author
First Published Feb 15, 2024, 8:59 AM IST

சென்னையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்

மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் வேலை வாய்ப்பை தேடி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சென்னைக்கு வரும் நிலையில் வீடுகள் வாடகைக்கு கிடைப்பதே சிரமமான சூழ்நிலையாக உள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் தலைநகரை அனைத்து ஊர்களுக்கும் மத்தியில் இருக்கும் திருச்சிக்கு மாற்ற பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது தமிழக சட்டமன்றத்திலும் இந்த கோரிக்கை எழுந்துள்ளது. 

BJP MLA demand to shift the capital of Tamil Nadu to Trichy KAK

அடுத்து செங்கல்பட்டுக்கு பேருந்து நிலையம் மாற்றமா.?

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி, நாகர்கோவிலில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு வருவதற்கு எவ்வளவு பேருந்து கட்டணம் கொடுக்கிறார்களோ, அதே கட்டணத்தை கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னைக்குள் வருவதற்கு கொடுக்க வேண்டிய நிலை உள்ளதாக கூறினார். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு  பிராட்வேயில் இருந்து கோயம்பேட்டுக்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டது. தற்போது, கிளாம்பாக்கத்துக்கு சென்றுள்ளதகா தெரிவித்தார். இதே நிலை நீடித்தால்  இன்னும் 10 ஆண்டுகள் கழித்து செங்கல்பட்டுக்கு பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை வந்தாலும் வரலாம் என கூறினார்.

BJP MLA demand to shift the capital of Tamil Nadu to Trichy KAK

திருச்சியை தலைநகராக மாற்றுங்கள்

எனவே தலைநகர் சென்னையை திருச்சிக்கு மாற்றிவிட்டால், குறைவான நேரத்தில் திருச்சிக்கு அனைத்து இடத்திலும் இருந்து வந்துவிடலாம். மேலும் போக்குவரத்து நெரிசல் உட்பட அனைத்தையும் தடுக்க முடியும் என கூறினார். இதற்கு பதில அளித்த, போக்குவரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தலைநகர் சென்னையை திருச்சிக்கு மாற்ற நல்ல யோசனை சொல்லியிருக்கீங்க,  அப்படியே, இந்தியாவின் தலைநகர் டெல்லியை சென்னைக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன் தமிழகத்தின் தலைநகரை திருச்சிக்கு கொண்டு சென்றாலும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். அதனால், இங்கேயே இருக்கட்டும் என கூறினார். 

இதையும் படியுங்கள்

அதிமுகவை கை விட்ட தமாகா... பாஜக கூட்டணியில் இணைய முடிவு.? எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த ஜி.கே.வாசன்

Follow Us:
Download App:
  • android
  • ios