என்னது 5 கி.மீ. தூரத்தைக் கடக்க 45 நிமிஷமா? தமிழச்சி தங்கபாண்டியனை தாறுமாறாக கேள்வி கேட்ட பாஜக பிரமுகர்!
சென்னை சாலைகள் கனமழைக்கு மட்டுமல்ல சிறிய அளவிலான மழைக்கு கூட கடும் சேதத்திற்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக பள்ளிக்கரணை சாலையால் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் கொஞ்சம் நெஞ்சம் அல்ல. இப்பகுதி போக்குவரத்து நெரிசல் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
பள்ளிக்கரணை சாலையின் மோசமான நிலை குறித்து பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பிரதீப் தென் சென்னை தொகுதி திமுக எம்.பி.க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை சாலைகள் கனமழைக்கு மட்டுமல்ல சிறிய அளவிலான மழைக்கு கூட கடும் சேதத்திற்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக பள்ளிக்கரணை சாலையால் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் கொஞ்சம் நெஞ்சம் அல்ல. இப்பகுதி போக்குவரத்து நெரிசல் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து பாஜக ஐ.டி. விங்க் மாநில செயலாளர் பிரதீப் தனது எக்ஸ் தள பக்கத்தில்: தென் சென்னை தொகுதி திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளிக்கரணையில் உள்ள ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸிலிருந்து காமாட்சி மருத்துவமனைக்கு இடையிலான 5 கிமீ தூரத்தை கடக்க 45 நிமிடம் ஆனது, இன்று காலை வாகனங்கள் அங்குலம் அங்குலமாக சென்றன. இது பற்றி யாருக்கும் கவலை இல்லை. நன்றி திமுக என பதிவிட்டிருந்தார்.
மேலும் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் குறைந்தபட்சம் இந்த நிலை குறித்து சிறிதளவாவது சிந்திக்க வேண்டும். பள்ளிக்கரணையில் இருந்து 8.30 மணிக்கு தொடங்கி 10.30 மணிக்கு அசோக் பில்லர் சென்றடைய வேண்டியுள்ளது. பள்ளிக்கரணையில் இருந்து வேளச்சேரி வரை தேக்கநிலை ஏற்படுகிறது. இதற்கான திட்டம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை வேளச்சேரியிலிருந்து பெரும்பாக்கம் வரை உள்ள பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல், மோசமான சாலைகள். வாகனம் அங்குலம் அங்குலமாக நகருகிறது. பெரும்பாக்கம் மெயின் ரோடு, வெறும் 2-3 கிமீ தூரம், நாளின் எந்த நேரத்தையும் கடக்க இவ்வளவு நேரம் ஆகும்! பரிதாபகரமான சாலைகள் மற்றும் யாரிடமிருந்தும் பதில் இல்லை. சென்னைக்கு சிறந்த நிர்வாகம் தேவை! என பதிவிட்டுள்ளார். ஏற்கனவே பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்ட ட்வீட்டிற்கு எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பதிலளித்த நிலையில், இவரது கேள்விக்கு என்ன பதிலளிக்கப்போகிறார் என்பதை பொருந்திருந்து பார்ப்போம்.