திமுகவினரிடமே பிஜேபிக்கு ஓட்டு கேட்டு வாக்களிக்க கோரி 5 லட்ச ரூபாய்க்கு காப்பீடு வழங்குவதாக கூறிய பிஜேபியினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் சென்னையில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் 110 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மருத்துவர் ராஜசேகருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது புஷ்பா நகர் பகுதியில் பொதுமக்கள் என நினைத்து திமுகவினரிடமே பாஜகவுக்கு வாக்களித்தால் ஐந்து லட்ச ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு வழங்கப்படும் எனவும் அதற்கான மாதிரி காசோலைகளை கொடுத்ததால் அதிர்ச்சியடைந்த திமுகவினர், உடனடியாக அவரை சுற்றி வளைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக பாஜக தொண்டர்கள் மூன்று பேர் உட்பட இரண்டு பெண்களை பிடித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் புதுமைப்பெண் வங்கி என பெயரிட்டு காசோலை போன்றே மாதிரி காசோலைகளை தயாரித்து அதில் மருத்துவ காப்பீடு 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும் காசோலையில் கையெழுத்திடும் இடத்தில் பாஜக வேட்பாளர் மருத்துவர் ராஜசேகரின் பெயரை குறிப்பிட்டுள்ளனர்
தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் அடிப்படையில் பாஜகவை சேர்ந்த தொண்டர்கள் 3 பேர் பெண்கள் உட்பட மொத்தம் ஐந்து பேரை வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
