கலைஞர் கோட்டம் இன்று திறப்பு: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார்!

திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று திறந்து வைக்கவுள்ளார்

Bihar CM nitish kumar to inaugurate Kalaignar kottam today

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் ரூ.12 கோடி செலவில் 7,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று திறந்து வைக்கிறார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 100ஆவது பிறந்தநாளை திமுகவினர் நூற்றாண்டு விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, திருவாரூர் அடுத்த காட்டூரில் சுமார் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசிற்கு செக் வைத்த திமுக..! சிபிஐ விசாரணைக்கு தடை..! அரசிதழில் வெளியிட்டு அதிரடி

இந்த நிலையில், கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று திறந்து வைக்கிறார். கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்துவேலர் நூலகத்தை அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்ளவுள்ளனர். திருவாரூர் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவையடுத்து, வைரமுத்து தலைமையில் கவியரங்கமும், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.

கலைஞர் கோட்டம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன் தினமே திருவாரூர் புறப்பட்டு சென்று விட்டார். அரசியல் தலைவர்களின் வருகையையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம், திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கலைஞர் கோட்டத்தில் 2 திருமண மண்டபங்கள், அருங்காட்சியகம், முத்துவேலர் நூலகம், கலைஞரின் முழு உருவ சிலை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios