பாரத் நெட் திட்டம் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளில் ஓராண்டுக்குள் இணைய வசதிகள் ஏற்படுத்தப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
பாரத் நெட் திட்டம் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளில் ஓராண்டுக்குள் இணைய வசதிகள் ஏற்படுத்தப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச்செயலகத்தில் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET Corporation) சார்பில் தமிழ்நாட்டில் பாரத் நெட் இரண்டாம் கட்ட திட்டம் (BharatNet Pase-II) செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு இந்த ஒப்பந்தமானது கையெழுத்தாகியுள்ளது. மேலும் இன்று ஐடி துறையின் ஒரு மைல் கல்லாக பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் மாற்றுதிறனாளிகள், திருநங்கைகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு, இ சேவை மையங்களில் பணியில் அமர்த்த முன்னிரிமை வழங்கப்படும். தமிழ்நாட்டில் எந்த பகுதிகளில் இ சேவை மையங்கள் இல்லாமல் இருக்கிறதோ அங்கெல்லாம் மையங்கள் அமைக்கப்படும் என்று கூறினார். கடந்த 10 ஆண்டுகளாக வீழ்ச்சியில் இருந்த இ சேவை மையங்கள் தற்போது மேம்படுத்தப்படுள்ளது. அதனுடன், புதிதாக அரசு பொறுப்பேற்ற பிறகு கூடுதலாக 56 இ-சேவை வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
ஏற்கனவே பாரத் நெட் மூலம் 2 பேக்கேஜ் Roll out செய்து பணிகள் தொடங்கப்பட்டது. இன்று 509 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பேக்கேஜ் Roll Out செய்யப்பட்டுள்ளது. விரைவில் 4-ஆவது பேக்கேஜ் Roll out செய்யப்படும். இன்று Roll Out செய்யப்பட்ட பேக்கேஜ் மூலம் ஓராண்டுக்குள் தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சி, கிராமங்களில் பணிகள் முடிவுக்கு வரும். இதனால் 12,525 கிராமங்களுக்கு இணைய வசதிகள் கிடைக்கப்பெறும் என குறிப்பிட்டார். ஒட்டு மொத்தமாக 1,810 கோடி மதிப்பீட்டில் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
அனைத்து மாநிலங்களிலும் கிராம ஊராட்சிகளை ஒன்றிணைத்து அரசின் சேவைகளை இணையதளம் மூலம் மக்களுக்கு வழங்க 'பாரத் நெட்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ரூ. 1230 கோடி மதிப்பில் 12,525 கிராமங்களிலும் இணையவசதி ஏற்படுத்த தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. இத்திட்டத்திற்கு கண்ணாடி இழை கேபிள்கள் மொத்தமாக 15 சதவிகிதம் நிலத்திற்கு அடியிலும், 85% வான் வழியிலும் மொத்தமாக 49,500 கி.மீ அமைக்கப்பட உள்ளது.இந்நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்த ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டம் மூலம், அரசின் அனைத்து இணைய சேவைகள், கேபிள் டிவி சேவைகள், மின்னாளுமை சேவைகளை தங்கள் கிராமத்திலேயே பொதுமக்கள் பெறலாம்.
