Asianet News TamilAsianet News Tamil

பி.இ. அட்மிஷனுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு… 10 பேர் 200 க்கு 200 கட்ஆப் !! கலந்தாய்வு தேதியும் அறிவிப்பு ,,,,

BE rank list published by higher education minister
BE rank list published by higher education minister
Author
First Published Jun 28, 2018, 9:40 AM IST


தமிழகத்தில்  பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான  தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகள் இதனை வெளியிட்டார்

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. 

இந்த படிப்புகளில் சேருவதற்காக 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். முதலில் அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டது.

BE rank list published by higher education minister

இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்காக விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. அதன்பின்னர் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டது.

தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்த நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழச்சியில், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், தர வரிசைப் பட்டியலை வெளியிட்டார். அப்போது பேசிய அமைச்சர், கவுன்சிலிங் ஜூலை 6-ம் தேதி தொடங்கும் என அறிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios