Backwardness Welfare Announcements

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கான நலத்துறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாதவது:

நகர் புறங்களில் 5 கல்லூரி விடுதிகள் ரூ.1.67 கோடி செலவில் புதிதாக தொடங்கப்படும்.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்படும் நிர்வாக மானியம் ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரி விடுதிகளுக்கு ரூ.49.84 லட்சத்தில் விளையாட்டு பொருட்கள் வாங்கப்படும்.

விடுதிகளில் பணியாற்றும் பகுதி நேர துப்புரவு தொழிலாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் உயர்த்தப்படும்.

விடுதிகளில் புதிதாக தொகுப்பூதிய பகுதி நேர துப்புரவு பணியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.

வெளிமாநில கட்டுமான தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திலேயே முனைப்பு பதிவு மேற்கொள்ளப்படும்.

தொழிலாளர்கள் நலத்துறையில் வழக்குகளில் நிலையை கண்காணிப்பு மேலாண்மை அமைக்கப்படும்