சேலம் அருகே அதிர்ச்சி.. குப்பையில் கிடந்த பச்சிளம் குழந்தை.. அலறியடித்து ஓடிய மக்கள்..
சேலம் மாநகரில் நெத்திமேடு அருகே பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குப்தா மெஷின் ரோடு பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் இன்று காலை வழக்கம் போல் மாநகராட்சி பணியாளர்கள் குப்பை அள்ள வந்துள்ளனர். அப்போது அங்கு உயிரிழந்த நிலையில் பச்சிளங் குழந்தை சடலம் கிடந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அன்னதானப்பட்டி காவல்துறயினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க:என்றுமே நேதாஜிதான் ! முலாயம் சிங்கின் வெற்றி, தோல்வியை கருதாத ஆதரவாளர்கள்
குழந்தையை வீசிச் சென்ற நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் அந்த குழந்தை ஆணோ அல்லது பெண்ணோ என்பது அடையாளம் காணப்பட முடியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிறந்த சில மணி நேரங்களை ஆன பச்சிளம் குழந்தைகளை குப்பை தொட்டியில் வீச சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க:கோவில் ”சைவ முதலை பாபியா ” அகால மரணம்.. பக்தர்கள் வேதனை..