கோவில் ”சைவ முதலை பபியா ” அகால மரணம்.. பக்தர்கள் வேதனை..
கர்நாடகா எல்லையில் உள்ள காசர்கோடு அனந்த பத்மநாப கோவிலின் 'பபியா' என்ற முதலை இந்த உலகத்தை விட்டு பிரிந்தது. பல ஆண்டுகளாக கோவில் பக்தர்களின் மைய புள்ளியாக இருந்த முதலை அகால மரணம் அடைந்தது பக்தர்கள் வட்டாரத்தில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வயது 75.
மங்களூரு எல்லைக்குட்பட்ட காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கும்பலே அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் பபியா எனப்படும் சைவ உணவு முதலை இருந்தது. இந்த முதலை (பபியா முதலை) கடந்த 75 ஆண்டுகளாக கோயில் ஏரியில் இருப்பதாக நம்பப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபத்மநாப சுவாமி கோவில் ஏரியில் பபியா வசித்து வந்தது. இந்தக் கோயில் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:mulayam singh death: எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் போர் வீரர் முலாயம் சிங் : பிரதமர் மோடி புகழாஞ்சலி
பபியா முதலையின் இறுதிச் சடங்குகள் கோவில் வளாகத்தில் நடைபெறும். தினமும் இரண்டு முறை வழிபாடு முடிந்து பிரசாதம் பெறும் முதலை, கடவுளின் முதலை என அழைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தண்ணீரில் இருந்து வெளியே வந்து கோவிலுக்குள் பபியா முதலை நுழைந்தது. இது அப்போது மிகவும் ஆச்சரியமாக பேசப்பட்டது.
அனந்தபுரா கோவில் துளுநாட்டின் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாகும். சரோவர் க்ஷேத்ரா மக்களால் இது அனந்தபுரா என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு 5 தலை பாம்பின் மீது அனந்தபத்மநாப சுவாமியின் சிலை உள்ளது. இந்தக் கோவிலின் மற்றொரு முக்கியத்துவம் முதலை. இந்த முதலை கோவிலில் மதிய பூஜைக்குப் பின்னர் வழங்கப்படும் பிரசாதங்களை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளும். மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது கையால் கொடுக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளும். சமைக்கப்பட்ட அரிசி உணவு, வெல்லம் இதுதான் இந்த முதலையின் முக்கிய உணவு. ஏரியில் இருக்கும் மீன்களுக்குக் கூட இந்த முதலை எந்த வகையிலும் தீங்கு விளைவித்தது இல்லை.
புராணக்கதைகளின்படி சுமார் 75 ஆண்டுகளாக, அனந்தபுர ஏரி கோவிலில் காவலுக்கு இருந்த முதலையை பிரிட்டிஷ் சிப்பாய் ஒருவர் கொன்றுவிட்டார். ஆச்சரியப்படும் விதமாக, சிப்பாய் சிறிது நேரம் கழித்து பாம்புக்கடியால் இறந்தார். சிப்பாயின் கொடூரமான குற்றத்திற்காக, பாம்பு தெய்வமான அனந்தன் கொடுத்த தண்டனை என்று உள்ளூர்வாசிகள் நம்பினர். சிறிது நேரத்திற்குப் பிறகு, மற்றொரு முதலை ஏரியில் தோன்றியது என்று கூறப்படுவது உண்டு. தற்போது பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வந்து முதலையை வணங்கிச் செல்கின்றனர்.
மேலும் படிக்க:Mulayam Singh Yadav Death: உத்தரப்பிரதேசத்தின் ‘நேதாஜி’! யார் இந்த முலாயம் சிங் யாதவ்