“ஆண் பசங்க, ஆண்பசங்க, தவறு நடப்பது இயல்புதான்” என்று 2012ம் ஆண்டு டெல்லி நிர்பயா பாலியல் வழக்குக் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் சாமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்.
“ஆண் பசங்க, ஆண்பசங்க, தவறு நடப்பது இயல்புதான்” என்று 2012ம் ஆண்டு டெல்லி நிர்பயா பாலியல் வழக்குக் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். ராம் மனோகர் லோகியாவால் வார்த்தெடுக்கப்பட்டவர், சோசலிஸ்ட் கருத்துக்களை தாங்கி வளர்ந்தவர், பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், கடைசி வரை ஆணாதிக்க மனநிலையிலேயே இருந்தார்.
பாலியல் பலாத்காரம் குறித்து முலாம் சிங் கருத்துக்கு அப்போதுஐ.நா. தலைவர் பாங்கி மூன்கூட அதிருப்தி தெரிவித்திருந்தார். அந்த அளவுக்கு அவரின் கருத்துக்கள் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், கல்வி, வேலைவாய்ப்பிலும் 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மசோதா கொண்டுவரப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் காலமானார்

ஆனால், மக்களவைக்கு வந்தபோது, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத் யாதவும் கடுமையாக எதிர்த்தால் அந்த மசோதா கடைசி வரை நிறைவேறவில்லை. இருவருமே தனித்தனி கட்சி நடத்திய தலைவர்களாக இருந்தாலும், பிற்காலத்தில் முலாயம் வீட்டிலிருந்து பெண் எடுத்து, லாலுபிரசாத் யாதவ் குடும்பம், சம்மந்தியாகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முறையாக மல்யுத்தம் கற்றுக்கொண்டவராக இருந்ததால், சமாஜ்வாதிக் கட்சித் தொண்டர்களாலும், கட்சிக்குள்ளும் “நேதாஜி” என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டார் முலாயம் சிங் யாதவ். உத்தரப்பிரதேசத்தில் ஈட்டாவா மாவட்டத்தில் உள்ள சைபாலி கிராமத்தில் கடந்த 1939ம் ஆண்டு நவம்பர் 22ம்தேதி முலாயம் சிங் யாதவ் பிறந்தார். இவரின் தந்தை சுகர் சிங் யாதவ், தாய் மூர்த்தி தேவி. முலாயம் சிங் குடும்பம் மிகப்பெரியது. முலாயம் உடன்பிறந்தவர்கள் 4சகோதரர்கள், 5வது ஒருவர் மற்றொரு தாய்க்கு பிறந்தவர்.
குஜராத் தேர்தலில் மீண்டும் எதிரொலிக்கும் சாதி: பிரதமர் மோடியை அவமதித்த ஆம் ஆத்மி தலைவர்
இதில் ராம் யாதவ், ரத்தன் யாதவ் ஆகியோருக்கு அடுத்தார்போல் 3வதாகப் பிறந்தவர் முலாயம் சிங் யாதவ். இவருக்கு இளையவராக இருப்பவர் ராஜ்பால் சிங் யாதவ், ஷிவபால் சிங் யாதவ், ராம் கோபால் யாதவ். நன்குபடித்தவரான முலாயம் சிங் யாதவ் 3 பட்டங்களை பெற்றுள்ளார். ஈட்டாவா கல்லூரியில் பிஏ அரசியல் அறிவியலும், ஆக்ரா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.வும், சிகோபாத்தில் உள்ள ஏ.கே. கல்லூரியில் பிடி படிப்பும் முலாயம்சிங் முடித்தார்.

முலாயம் சிங் யாதவுக்கு 2 மனைவிகள். முதல்மனைவி மாலதி தேவிக்குப் பிறந்தவர்தான் அகிலேஷ் யாதவ். முலாலம் சிங் யாதவுக்கு சாதனா குப்தா என்ற பெண்ணுடன் தொடர்புஇருந்தாலும் வெளிஉலகிற்கு பெரும்பாலும் தெரியவில்லை. அதன்பின் முலாயம்சிங் யாதவ், சாதனா குப்தா உறவை உச்ச நீதிமன்றமே ஏற்றது. சாதனா குப்தாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி இருந்தது.
அதில் பிறந்தவர் பிரதீக் யாதவ். இவரின் மனைவிதான் அபர்னா யாதவ். அபர்னா யாதவ்தான் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனா குப்தாவும் கடந்த ஜூலை மாதம் காலமாகிவிட்டார். முலாயம் சிங்கின் தனிப்பட்ட வாழ்க்கையும் சற்று குழப்பத்துடனே சென்றது.
சோசலிசஸ்ட்கள் ராம்மனோகர் லோகியா, ராஜ் நரேன் ஆகியோரால் உருவாக்கப்பட்டவர்கள் முலாயம் சிங் யாதவ், லாலுபிரசாத் யாதவ். இருவருமே பிற்காலத்தில் பீகார், உ.பி. முதல்வர்களாக மாறினார்கள். 1967ம் ஆண்டு சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி சார்பில் ஜஸ்வந்த் சிங் தொகுதியில் போட்டியி்ட்டு முலாயம் சிங் யாதவ் எம்எல்ஏவாகினார். இந்தத் தொகுதியில் இருந்து மட்டும் 7 முறை எம்எல்ஏவாக முலாயம் சிங் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாங்கள் தான் ஆணுறையை அதிகம் பயன்படுத்துகிறோம்.. மோகன் பகவத்துக்கு பதிலடி கொடுத்த ஓவைசி’

இந்திரா காந்தி நாட்டில்அவசரநிலையைக் கடந்த 1975ம் ஆண்டு கொண்டு வந்தபோது, முலாயம் சிங் யாதவ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார். அதன்பின 1977ம் ஆண்டு உ.பி. மாநிலத்தில் முதல்முறையாக அமைச்சராக முலாயம் சிங் பதவி ஏற்றார்.
1980ம் ஆண்டில் லோக் தளம் கட்சியின் தலைவராகவும, 1982ம் ஆண்டில் உ.பி. எதிர்க்கட்சித் தலைவராகவும் முலாயம் சிங் இருந்தார். லோக் தளம் கட்சி இரண்டாகப் பிளவுபட்டபின், கிராந்திகாரி மோர்ச்சா கட்சி என்று புதிதாக முலாயம் சிங் கட்சி தொடங்கினார்.
1967ம் ஆண்டிலிருந்து 1990ம் ஆண்டுவரை முலாயம் சிங் அரசியல் வாழ்க்கை நிலையற்றதாக, பல்வேறு கட்சிகளில் சேர்ந்தல், விலகுதல் என்ற நிலையில்தான் இருந்தது. ஜனதா கட்சி, ஜனதா தளம், சம்யுக்தா சோசலிஸ்ட் என்று 3 கட்சிளுக்கு மாறிய முலாயம் சிங், கிராந்தி மோர்ச்சா என கட்சி ஆரம்பித்தும் சோபிக்கவில்லை.
1990ம் ஆண்டு வி.பி.சிங்கின் ஆட்சி மத்தியில் கவிழ்ந்தபின் சந்திரசேகரின் ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து, காங்கிரஸ் ஆதரவுடன் உ.பி.யில் முதல்முறையாக முலாயம் சிங் யாதவ் முதல்வராகினார். ஆனால் ஒரு ஆண்டிலேயே காங்கிரஸ் ஆதரவை விலக்கிக்கொள்ள முலாயம் சிங் ஆட்சி கவிழ்ந்தது. அதன்பின் நடந்த இடைத் தேர்தலில் பாஜகவிடம் ஆட்சியை முலாயம் சிங் இழந்தார்.

1992ம் ஆண்டு சுயமாக சமாஜ்வாதிக் கட்சியைத் தொடங்கிய முலாயம் சிங் யாதவ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டு வைத்து தேர்தலைச் சந்தித்தார். இரு கட்சிகளின் ஒரே நோக்கம் பாஜகவை ஆட்சியில் அமரவிடக்கூடாது என்பதுதான். 1993ம் ஆண்டு காங்கிரஸ் ஆதரவுடன், முலாயம் சிங் 2வது முறையாக முதல்வராகினார்.
2002ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி சேர்ந்து ஆட்சியைப் பிடித்தன. மாயாவதி முதல்வராகினார். ஆனால், இந்தக் கூட்டணி சில மாதங்கள்தான் நீடித்த நிலையில் பாஜக ஆதரவை வாபஸ் வாங்கியதால், மாயாவதி ஆட்சி கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து சுயேட்சைகள், சிறு கட்சிகள் ஆதரவுடன் முலாயம் சிங் யாதவ் ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சி செய்தார்.
அப்போது கன்னோஜ் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்தபோதிலும், உ.பி. முதல்வராக முலாயம் சிங் யாதவ் பொறுப்பேற்றார். அடுத்த 6 மாதங்களில் குன்னாவுர் தொகுதியி்ல்போட்டியிட்டு முலாயம் சிங் வென்றார்.
2004ம் ஆண்டு நடந்த மக்களவைத்தேர்தலில் மெயின்பூரி தொகுதியில் மாநில முதல்வராக இருந்துகொண்டே போட்டியிட்டு வென்றார். ஆனால், காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்ததால், மத்தியில் சமாஜ்வாதிக் கட்சியால் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியவில்லை.

அதிகமான எம்.பி.க்கள் வைத்திருந்தபோதிலும், முலாயம் சிங்கால் காங்கிரஸ் அரசில் எந்த ஆதிக்கமும்செலுத்த முடியவில்லை. இதையடுத்து, தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்த முலாயம் சிங், 2007வரை உ.பி. முதல்வராகத் தொடர்ந்தார்.அடுத்து நடந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியிடம் ஆட்சியை முலாயம் சிங் இழந்தார்.
1996் ஆண்டு எம்.பியாக இருந்தபோது, அப்போது பிரதமராக இருந்த தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால் ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராக முலாயம் சிங் இருந்தார். 1999ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சம்பல், கன்னோஜ் ஆகிய இரு தொகுதிகளிலும் முலாயம் சிங் போட்டியி்ட்டு வென்றார்.
ஆனால், தனது மகன் அகிலேஷ் யாதவுக்காக கன்னோஜ் தொகுதியில் மட்டும் முலாயம் சிங் ராஜினாமா செய்தார். அதன்பின் 2009ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை மக்களவை எம்.பியாகவே தொடர்ந்து வருகிறார்.
2009ம் ஆண்டில் 5வது முறையாக மெயின்புரி தொகுதியிலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முலாயம் சிங், 2014-19ம் ஆண்டில் மெயின்புரி, ஆசம்கார்க் தொகுதியில் போட்டியிட்டு வென்றார், ஆனால் மெயின்பூரி தொகுதியில் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் மீண்டும மெயின்பூரி தொகுதியில் போட்டியி்ட்டு முலாயம் சிங் வென்றார்

உத்தரப்பிரதேசத்தில் 3 முறை முதல்வராக இருந்தவர். 7முறை எம்.பி.யாகவும், 10 முறை எம்எல்ஏவாகவும் இருந்தவர் முலாயம் சிங் யாதவ். இதில் முதல்முறையாக எம்எல்ஏவாகியபோது சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சியிலும், அதன்பின் சரண்சிங் தோற்றுவிட்ட பாரதிய கிராந்தி தளம் கட்சியில் இருந்து இருமுறையும் எம்எல்ஏயாகவும் முலாயம் சிங் இருந்தார்.
ஜனதா கட்சி,ஜனதா தளம் உருவான காலத்தில் அதில் சேர்ந்து 2 முறையும் எம்எல்ஏவாக முலாயம் சிங் இருந்தார். அதன்பின 1992ம் ஆண்டு சுயமாக சமாஜ்வாதிக் கட்சியைத் தொடங்கியபின், அதில் 4முறை எம்எல்ஏவாக முலாயம் சிங் இருந்தார். சமாஜ்வாதிக் கட்சி தொடங்கியபின்புதான் மக்களவைத் தேர்தலில் நின்று மெயின்பூரி தொகுதியில் வென்று, முதல்முறையாக முலாயம் சிங் யாதவ் 1996ம் ஆண்டு எம்.பியாகினார். அப்போது தேவகவுடா, குஜ்ரால் ஆட்சியி்ல் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் முலாயம் சிங் இருந்தார்.
முலாயம்சிங் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும், ஆணாதிக்க மனோபாவத்துடனே கடைசிவரை இருந்தவர் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவதுண்டு. அதனால்தான் 2012ம் ஆண்டு டெல்லி நிர்பயா கூட்டுப்பலாத்காரத்தின்போது, ஆண்பிள்ளைகள், ஆண்பிள்ளைகள்தான், தவறுநடப்பதுஇயல்புதான் என்று முலாயம் சிங் பேசியது தேசிய அளவில் சர்ச்சையானது, விவாதப்பொருளாக மாறியது.
திபெத்தின் சுதந்திரத்துக்காக துணிச்சலாகக் குரல் கொடுத்த முலாயம் சிங் யாதவ், பாகிஸ்தானைவிட சீனாதான் மோசமான நாடு, ஆபத்தானது. பாகிஸ்தானில் ரகசியமாகஅணு ஆயுதத்தை சீனா மறைத்துவைத்துள்ளது. பாகிஸ்தான் இ்ந்தியாவுக்கு எதிரி அல்ல, சீனாதான் எதிரி என்று முலாயம் சிங் தடாலடியாகப் பேசினார்.

2012ம் ஆண்டு தேர்தலில் சாமாஜ்வாதிக் கட்சி தோல்விஅடைந்ததற்கு முக்கியக் காரணமே முலாயம் சிங் குடும்பப் பிரச்சினைதான். முலாயம் சிங் இளைய சகோதரர் ஷிவபால் சிங் தலைமையில் ஒருபிரிவாகவும், அகிலேஷ்யாதவ் சித்தப்பா ராம் கோபால் யாதவ் ஆகியோர் தலைமையில் ஒருபிரிவாகவும் செயல்பட்டது. ஷிவபால் யாதவுக்கு முலாயம் சிங் ஆதரவு தெரிவித்தார்.
ஒரு குடும்பத்துக்குள் தந்தை,மகன்,சித்தப்பா, சகோதரர்கள் அடித்துக்கொண்டு சண்டையிட்டது, தேர்தலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தி சமாஜ்வாதிக்க ட்சி படுதோல்வியைச்சந்தித்தது. வெறும் 47 இடங்களில் மட்டும்தான் சமாஜ்வாதிக் கட்சி வென்றது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குடும்பத்தினருக்கு இடையே சமரசத்தை செய்துவைத்த முலாயம் சிங் யாதவால் சமாஜ்வாதிக் கட்சி கணிசமான இடங்களைப் பிடித்து கவுரவமாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.

நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான முலாயம்சிங் யாதவ் கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதி்க்கப்பட்டிருந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் முலாயம் சிங் உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து, குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், நுரையீரல் செயல்இழப்பால் இன்று முலாயம்சிங் காலமானார்.
