gujarat 2022 election: குஜராத் தேர்தலில் மீண்டும் எதிரொலிக்கும் சாதி: பிரதமர் மோடியை அவமதித்த ஆம் ஆத்மி தலைவர்
பிரதமர் மோடியின் சாதியின் பெயரைக் குறிப்பிட்டு குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவர் கோபால் இடாலியா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் தேர்தலில் மீண்டும் இந்த விவகாரம் எதிரொலிக்க இருக்கிறது.
பிரதமர் மோடியின் சாதியின் பெயரைக் குறிப்பிட்டு குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவர் கோபால் இடாலியா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் தேர்தலில் மீண்டும் இந்த விவகாரம் எதிரொலிக்க இருக்கிறது.
பாஜக செய்தித்தொடர்பாளர் அமித் மாளவியா தனது ட்விட்டர் பக்கத்தில், ஆம் ஆத்மி தலைவர் கோபால் இடாலியா பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் “ பிரதமர் மோடி தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளார். அரவிந்த் கேஜ்ரிவாலின் வலது கையான கோபால் இடாலியா, மாநில தலைவராக இருந்து கொண்டு, கேஜ்ரிவால் நிலைக்கு தள்ளப்பட்டு, பிரதமர் மோடியை தாழ்ந்த சாதி என விமர்சித்துள்ளார்.
குஜராத்தில் 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவையும், மண்ணின் மைந்தரையும், பிரதமர் மோடிக்காக வாக்களித்த ஒவ்வொரு குஜராத் மக்களையும், அதன் பெருமையையும், கோபால் இடாலியா அவமதித்துவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவில் பெண்கள் குறித்து அவதூறாக கோபால் இடாலியா பேசியிருந்தார். இதையடுத்து, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா இந்த வீடியோ குறித்து கையில் எடுத்துள்ளார்.
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் வாதங்களும், காழ்ப்புணர்ச்சிகளும் வெவ்வேறு அடையாளத்தில் வருகின்றன
குஜாராத் தேர்தலி்ல் இதுவரை காங்கிரஸ் கட்சி , பாஜக இடையிலான போட்டியாகத்தான் இருந்து வந்தது. முதல்முறையாக ஆம் ஆத்மி 3வது பெரிய கட்சியாக இருந்து போட்டியிட உள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தீவிர முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.
நாங்கள் தான் ஆணுறையை அதிகம் பயன்படுத்துகிறோம்.. மோகன் பகவத்துக்கு பதிலடி கொடுத்த ஓவைசி’
2017ம் ஆண்டு குஜராத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர், பிரதமர் மோடியே தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டு விமர்சித்தார். இந்த விவகாரம் குஜராத்தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, காங்கிரஸ் கட்சியும் மணி சங்கர் அய்யரை சஸ்பெண்ட் செய்து நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில் பாஜக அபாரமான வெற்றி பெற்றது
எஸ்.எஸ்.சி தேர்வு எழுதுவோருக்கு ஹேப்பி நியூஸ்.! வெளியானது சூப்பர் அறிவிப்பு
2017ம் ஆண்டு நடந்த சம்பவத்தின் பலனை நினைத்து இந்த விவகாரத்தை பாஜக உடனடியாகக் கையில் எடுத்துக்கொண்டது. பிரதமர் மோடி தனது பேரணியில் பேசுகையில் “ என்னை தாழ்ந்த சாதி என்று கூறினாலும் எனக்கு வியப்பில்லை. எதிர்க்கட்சிகள் என்னைப்பற்றி எப்படி வேண்டுமானாலும் தூற்றட்டும். குஜராத் வாக்காளர்கள் பதிலடி கொடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்