பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளர்   யோகா  குரு  பாபா ராம் தேவ். இவரை பற்றி அறியாதவர் யாரும் இருக்க முடியாது.  இந்நிலையில்   இவர்  ஒரு விபத்தில்  உயிரிழந்து விட்டதாக ஒரு வதந்தி  வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது.

இந்த  வதந்தியால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அதாவது இந்தியா மட்டுமின்றி  உலகம் முழுவதும்  யோகா  பயிற்சி வகுப்புகளை திறம்பட  நடத்தி  புகழின் உச்சிக்கு  சென்றவர்  பாபா  ராம் தேவ் என்பது  குறிப்பிடத்தக்கது .

தற்போது  பதஞ்சலி   என்ற பெயரில், அத்தியாவசிய  பொருட்கள் தொடங்கி,  பல  மூலிகை  தயாரிப்புகள் வரை விற்பனை  செய்யப் பட்டு  வருகிறது .  

தற்போது  சந்தையில்  பதஞ்சலி  நிறுவனத்திற்கு  தனி மரியாதை  உண்டு. அதுமட்டுமிலாமல்   மக்களும்  அதிகம்   விரும்பி   வாங்குகின்றனர்.

இன்னும் சொல்ல போனால்,  ஹிந்துஸ்தான்  யூனி லீவர் கோத்ரெஜ் உள்ளிட்ட  பல  பிரபல   நிறுவனத்திற்கும்   போட்டியாக   செயல் படுகிறது   யோகா குரு  பாபா  ராம்தேவின்   பதஞ்சலி   நிறுவனம்

இந்நிலையில்  ஒரு கார் விபத்தில்  பாபா  ராம் தேவ்  இறந்து விட்டதாக வாட்ஸ் ஆப்  உள்ளிட்ட  சமூக  வலைத்தளத்தில்  வதந்தி  பரவி வருகிறது.

இந்த வதந்திற்கு தற்போது முற்றிலுமாக முற்று புள்ளி  வைக்கும்  பொருட்டு  ராம்தேவின்  தரப்பிலிருந்து, மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  இருந்த போதிலும்  மக்கள்  மத்தியில்   ஒரு பதற்றம்  காணப் படுகிறது