ரோபோக்கள் மூலம் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் ஆயுத பூஜை, அக்டோபர் 4 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. நவராத்தியின் 9ஆம் நாளான நவம திதியில் வழக்கம்போல் ஆயுத பூஜை வழிபாடு நடத்தப்படுகிறது. கல்விக்குரிய சரஸ்வதி, செல்வத்துக்குரிய லட்சுமி, வீரத்துக்குரிய பார்வதி போன்றோரை வணங்கக்கூடிய பண்டிகைதான் நவராத்திரி.

இந்த பண்டிகையின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இதன்படி, தங்களது தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் பொருட்களை வைத்து இன்று பூஜை செய்யப்படுவது வழக்கம். இதேபோல, கல்விக்கு உதவும் சரஸ்வதியை வழிபடும் வகையில், கல்வி உபகரணங்களை வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க..“இனி 1 மணி நேரத்துக்கு முன்னாடியே போகலாம்.. ரயில் பயணிகளுக்கு அசத்தல் அறிவிப்பு !”

இதன்படி, பொதுமக்கள் தங்களது வீடுகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர். இதேபோல, தொழில் நிறுவனங்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. தங்கள் தொழிலுக்கும், படிப்புக்கும் உதவியாக இருக்கும் கருவிகளை அலங்கரித்து வழிபாடு நடத்துவர். அவல், பொரி, சுண்டல், பழம் உள்ளிட்டவைகளை சாமிக்கு படைத்து ஆயுத பூஜை கொண்டாடப்படும்.

Scroll to load tweet…

இந்நிலையில், பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்றான வேலூர் இன்டிடியூட் ஆப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் கண்டுபிடித்த ரோபோ மூலம், ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்.. பின்னணியில் நடந்தது என்ன ?