Auto driver murdered
வேலூரில் முன் விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரை சேர்ந்தவர் மதன் (32). இவர் வேலூர் புதிய பேருந்துநிலையத்தில் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார்.
இவருக்கும் கோபி என்பவருக்கும்ம் சில காலமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் ஆயுத பூஜையையொட்டி மதன் நண்பர்களுடன் சேர்த்து மது குடித்துள்ளார். அப்போது, அங்கு வந்த கோபிக்கும் மதனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மதனை கோபி மற்றும் சிலரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் தாக்குதலுக்குள்ளான மதன் நிலைகுலைந்து கீழே விழும்போது பின் மண்டையில் கல் தாக்கியதால் மரணமடைந்தார்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் வசக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
