மாணவர்கள் கவனத்திற்கு : தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கை தொடக்கம்.. கடைசி தேதி இதுதான்

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.

Attention students: Tamil Nadu Agricultural University admissions start.. Last date is this

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 14 இளநிலை, 3 டிப்ளமோ, படிப்புகளுக்கும், மீன்வள பல்கலைக்கழகத்தின் 6 இளநிலை, 3 தொழில்முறை பாடப்பிரிவுகளும் உள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலை.யின் மாணவர் சேர்க்கவும், டாக்டர். ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலை.யின் முதலமாண்டு மாணவர் சேர்க்கையும் இணைந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப்பதிவு மே 10 முதல் தொடங்கிய நிலையில், ஜூன் 9-ம் தேதி வரை இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணமாக எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் ரூ.250-ம், பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.500-ம் செலுத்த வேண்டும்.

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் tnau.in அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

இதையும் படிங்க : எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள்..! டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை..! என்ன சொன்னார் தெரியுமா.?

ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல், தரப்பட்டியல் வெளியீடு, ஆன்லைன் கவுன்சிலிங், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை மாணவர்சேர்க்கையில் அடங்கும். விண்ணப்ப செயல்முறை தொடங்கிய முதல் நாளில் மொத்தம் 2600 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஆன்லைனில் விண்ணப்பப்பதற்கான வழிமுறைகள் tnau.ac.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசு வேளாண் பல்கலை மற்றும் மீன் வள பல்கலை.யின் மாணவர் சேர்க்கை செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்று வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மிக தீவிர புயலாக வலுப்பெற்ற மோக்கா..! கரையை கடக்கும் போது 175 கிமீ வேகத்தில் காற்று வீசும்- வானிலைமையம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios