Asianet News TamilAsianet News Tamil

திறந்து கிடந்த ஏ.டி.எம் மெஷினைப் பார்த்து கொள்ளை என பயந்து காவலாளர்கள் விசாரணை…

ATM machine that had been left open for fear of seeing the security guards investigation of burglary
atm machine-that-had-been-left-open-for-fear-of-seeing
Author
First Published Mar 27, 2017, 8:56 AM IST


மார்த்தாண்டத்தில் ஏ.டி.எம். மெஷின் திறந்து கிடந்ததால், பணத்தை யாரேனும் கொள்ளை அடித்தனரா என்று பயந்து காவலாளர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏ.டி.எம் மெஷின் பழுதுபார்க்கும் பணி நடப்பதால் திறந்து போட்டுள்ளனர் பணியாட்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் இருக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் தேவைக்காக இரண்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த மையத்தில் இருந்து தினமும் எண்ணற்ற வாடிக்கையாளர்கள் பணம் எடுத்து செல்கின்றனர்.

நேற்றுமுன்தினம் இரவு அந்த பகுதியில் மார்த்தாண்டம் காவலாளர்கள் சுற்றுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏ.டி.எம். மையத்தில் இருந்த ஒரு இயந்திரத்தின் மேல் பகுதி திறந்து இருந்தது. மேலும், யாரோ உடைத்தது போல இருந்தது. இதைப் பார்த்த காவலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அருகில் சென்ற பார்த்தபோது, யாரோ மர்ம நபர் ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்திருக்கலாம் என நினைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தக்கலை காவல் உதவி கண்காணிப்பாளர் அபினேவ், மார்த்தாண்டம் ஆய்வாளர் சிவராஜ் பிள்ளை மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரியை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, திறந்து இருந்த ஏ.டி.எம். இயந்திரம் சில நாள்களாக பழுதடைந்து இருக்கிறது என்ற பதில் கிடைத்தது. மேலும், அந்த இயந்திரத்தை பழுது பார்க்கும் பணி நடப்பதால், பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் இயந்திரத்தை திறந்து வைத்து விட்டுச் சென்றுள்ளனர். மேலும், இந்த இயந்திரத்தில் பணம் எதுவும் வைக்கப்படவில்லை எனவும் வங்கி அதிகாரி தெரிவித்தார்.

அதன்பின்பு, திருட்டு எதுவும் நடக்கவில்லை என்ற ஆனந்தத்தில் காவலாளர்கள் திரும்பினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios