அத்திக்கடவு-அவினாசி திட்டம் எப்போது தொடங்கப்படும்.? சட்டப்பேரவையில் துரைமுருகன் அறிவிப்பு
காளிங்கராயன் அணையில் தண்ணீர் இல்லாத நிலை இருப்பதாகவும், அங்கு தண்ணீர் வந்தவுடன் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டப்பேரவை இன்று தொடங்கியதும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கற் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து , பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம், வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதன் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற்றது அப்போது அத்திக்கடவு அவிநாசி திட்டம் என்பது 60 ஆண்டு கால விவசாயிகளின் கனவு திட்டமாக உள்ளதாகவும், 99% பணி நிறைவடைந்தது என அரசு தெரிவித்து வரும் நிலையில்,
அத்திக்கடவு - அவினாசி திட்டம்
எப்பொழுது இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றி பயன்பாட்டிற்கு வரும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகன், அத்திக்கடவு அவிநாசி திட்டம் முழுமையாக முடிவடைந்து விட்டதாகவும்,
இந்தத் திட்டத்தை தொடங்குவதற்கு காலிங்கராயன் அணையில் இருந்து 1.5 டிஎம்சி தண்ணீர் சம்ப் செய்து கொண்டு செல்ல வேண்டும் , ஆனால் தற்போது காளிங்கராயன் அணையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் போதுமான தண்ணீர் வந்தவுடன் முதலமைச்சர் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடங்கி வைப்பார் எனவும் கூறினார்.
இதையும் படியுங்கள்