Assistant Professor Workplace! Kovai Bharathiar University Vice Chancellor arrested
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி, லஞ்ச ஒழிப்பு புகாரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பேராசிரியர் பணி நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதாக சுரேஷ் என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். அவரின் புகாரை அடுத்து துணைவேந்தர் கணபதி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.‘
துணைவேந்தர் கணபதி மீது பல்வேறு புகார்களை மாணவர்களும், பேராசிரியர்களும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பேராசிரியர் பணி நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதாக சுரேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார்.
அவரின் இந்த புகாரை அடுத்து துணைவேந்தர் கணபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, சுரேஷ் என்பவரிடம் இருந்து கணபதி ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதில் ரூ.1 லட்சம் ரொக்கமாகவும், மீதமுள்ள ரூ.29 லட்சம் ரூபாயை செக் மூலமாகவும் கணபதி பெற்றுக் கொண்டதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியுள்ளனர். இந்த நிலையில் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி இன்று கைது செய்யப்பட்டார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாக பாரதியர் பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. யுஜிசி நியமனப்படி பணி நியமனம் செய்யப்படவில்லை என்று சில மாதங்களுக்கு முன்பும் துணை வேந்தர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
