தமிழகம் மற்றும் புதுவையில் 15-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் சில இடங்களில் மழை பெய்யலாம் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவிய “அசானி” தீவிர புயல்‌
இன்று காலை 02:30 மணி அளவில்‌ புயலாக வலுவிழந்து 08:30 மணி
அளவில்‌ ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம்‌ அருகே மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவுகிறது. 

இது வடக்கு-வடகிழக்கு திசையில்‌ வட ஆந்திரா கடலோர பகுதிகளின்‌ வழியாக நகர்ந்து, இன்று இரவு மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவக்கூடும்‌. இது அடுத்த 24 மணி நேரத்தில்‌ காற்றழுத்த தாழ்வு
மண்டலமாக வலுவிழக்கூடும்‌.

11.05.2022: வட தமிழகம்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, விருதுநகர்‌, தென்காசி,
திருநெல்வேலி, கன்னியாகுமாரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

12.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

13.05.2022 முதல்‌ 15.05.2022 வரை: தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

11.05.2022: மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 75 முதல்‌ 85 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 95 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. சூறாவளி காற்றின்‌ வேகம்‌ படிப்படியாக குறைந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

ஆந்திரா கடற்கரை பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 70 முதல்‌ 80 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 90 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. சூறாவளி காற்றின்‌ வேகம்‌ படிப்படியாக குறைந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 66 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

ஓரிசா கடற்கரை மற்றும்‌ அதனை ஓட்டிய மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ தமிழக கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

12.05.2022: ஒரிசா கடற்கரை மற்றும்‌ அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ தமிழக கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

13.05.2022: மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ தமிழக கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாளில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. ஆழ்‌ கடலில்‌ உள்ள மீனவர்கள்‌ உடனடியாக கரை இரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.‌