முதல் இதை செய்யுங்க... ஆக்டிவ் அரசியலில் இறங்கிய விஜய்! ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து விமர்சனம்!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகக் கூறியுள்ளார். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூறியுள்ளார். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்றும் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் வசித்து வந்தார். அங்கு புதிய வீடு கட்டி வரும் அவர், தற்காலிகமாக அயனாவரத்தில் வசித்து வந்தார். தினமும் இரவு நேரத்தில் பெரம்பூர் சென்று, கட்டிக்கொண்டிருக்கும் புதிய வீடு கட்சியினரைச் சந்திப்பார்.
அவ்வாறு வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் தனது நண்பர்களைச் சந்திக்க வந்த ஆம்ஸ்ட்ராங்கை மைக்கில் வந்த 6 பேர் கும்பல் சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.
ஆன்லைன் மூலம் பட்டா, சிட்டா ஆவணங்களை டவுன்லோட் பண்ணலாம்! இதுதான் சிம்பிள் வழி!
அங்கிருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர்கள் வீரமணி, பாலாஜி ஆகியோர் ஆம்ஸ்ட்ராங்கை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் முன்பே அவர் இறந்துவிட்டார். இந்தப் படுகொலை சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தப் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகக் கூறியுள்ளார். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
ட்விட்டரில் அவர் எழுதியுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.
நடுவானில் ஒரு நண்பேண்டா மொமெண்ட்! நெருங்கிய நண்பருடன் பயணித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!