ஆன்லைன் மூலம் பட்டா, சிட்டா ஆவணங்களை டவுன்லோட் பண்ணலாம்! இதுதான் சிம்பிள் வழி!

பொதுமக்கள் எந்த இடத்தில் இருந்தும் எந்த நேரத்திலும் பட்டா, சிட்டா ஆவணங்களை டவுன்லோட் செய்யும் வசதியை தமிழக அரசு வழங்குகிறது.

You can download Patta and Chitta documents online! This is the simple way! sgb

எந்த இடத்தில் இருந்தும் எந்த நேரத்திலும் பட்டா, சிட்டா ஆவணங்களை டவுன்லோட் செய்யும் வசதியை தமிழக அரசு வழங்குகிறது. எளிமையாக ஆன்லைனில் கிடைக்கும் இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு அரசு நில அளவை மற்றும் நிலவரித் திட்டத்தின் இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"கடந்த சில ஆண்டுகளில், பல்வகையான நில ஆவணங்கள் கணினிப்படுத்தப்பட்டு இணையவழியில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நில உரிமைதாரர்கள் பயனடையும் வகையில் கீழ்க்காணும் இணையவழிச்சேவைகள் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டத் துறையால் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

நடுவானில் ஒரு நண்பேண்டா மொமெண்ட்! நெருங்கிய நண்பருடன் பயணித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

1. கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

2. நில உரிமைதாரர்கள் புல எல்லைகளை அளந்து அத்து காட்டக்கோருவதற்கு https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

3. எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழிச் சேவையை (https://eservices.tn.gov.in) பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா, 'அ' பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றையும், நகர்ப்புற நிலஅளவைப் பதிவேட்டின் நகல்,

நகர நிலஅளவை வரைபடம் மற்றும் புல எல்லை வரைபடம் / அறிக்கை ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டா மாற்றத்திற்கு அளித்த விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

4. கிராம வரைபடங்கள் மற்றும் பழைய நிலஅளவை எண்களுக்கான புதிய நிலஅளவை எண்களின் ஒப்புமை விளக்கப்பட்டியல் போன்றவற்றை https://tnlandsurvey.tn.gov.in எனும் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதில் 1 மற்றும் 2-ல் உள்ள சேவைகளை தங்கள் அருகிலுள்ள பொதுச்சேவை மையங்கள் மூலமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்."

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

எப்போதும் டீ குடிச்சுட்டு தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா? அப்ப இதைத் தெரிஞ்சுகோங்க!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios