Asianet News TamilAsianet News Tamil

Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. அஞ்சலைக்கு எதிராக ஆக்ஷனில் இறங்கிய பாஜக.!

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் அவர் கட்டி வரும் புதிய வீட்டின் அருகெ வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

Armstrong murder case... wanted criminal Anjalai has been sacked from bjp tvk
Author
First Published Jul 19, 2024, 6:32 AM IST | Last Updated Jul 19, 2024, 6:53 AM IST

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக தேடப்படும் அஞ்சலை பாஜகவில் இருந்து அனைத்து பொறுப்புக்களிலும் இருந்து  அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் அவர் கட்டி வரும் புதிய வீட்டின் அருகெ வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மறைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் என்பவர் போலீசார் என்கவுண்டர் செய்யப்பட்டார். மீதமுள்ள 10 பேரும் போலீஸ் காவல் முடிந்து பூந்மல்லி  சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதையும் படிங்க: பாஜகவை சேர்ந்த அஞ்சலை யார்? இவர் யாருடைய மனைவி தெரியுமா? இவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பா?

Armstrong murder case... wanted criminal Anjalai has been sacked from bjp tvk

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு கழக பகுதி துணை செயலாளரும் வழக்கறிஞருமான மலர்கொடி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரன் மற்றும் திமுக பிரமுகரின் மகன் சதீஷ் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, அதிமுகவில் இருந்து மலர்கொடியும், தமாகாவில் இருந்து ஹரிஹரனும் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். 

Armstrong murder case... wanted criminal Anjalai has been sacked from bjp tvk

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வட சென்னை பாஜக மகளிரணி செயலாளரான அஞ்சலை தலைமறைவானதை அடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. பின்னணியில் இருப்பது யார்? போலீஸ் எடுத்த அதிரடி முடிவு!

Armstrong murder case... wanted criminal Anjalai has been sacked from bjp tvk

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: வட சென்னை மேற்கு மாவட்டத்தின் மாவட்ட துணைத் தலைவராக பணியாற்றி வந்த அஞ்சலை கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததால், மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios