தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்திற்கு தடை கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
தமிழகக் கோயில்களில் அர்ச்சர்கர்கள் மற்றும் பூசாரிகள் நியமிப்பது தொடர்பாக 2020 - ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை புதிய விதிகளை வெளியிட்டது. அதன்படி ஆகமப் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி பெற்ற, பதினெட்டு வயது முதல் முப்பதைந்து வயதுக்கு உட்பட்ட நபரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
![]()
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதிசைவ சிவாசார்யர்கள் சேவா சங்கம் மற்றும் சில தனிநபர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அர்ச்சகர் நியமனம் தொடர்பான இந்த வழக்கு நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என 2021 அக்டோபர் மாதம் தெரிவித்தது. அதன்பின்னர், இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான முதல் அமர்வு விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்திற்கு தடை கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதன் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு..வங்கியில் ஜீரோ பேலன்ஸா; கவலையை விடுங்க உங்களுக்கு கிடைக்கும் ரூ. 10000 கடன்; என்ன செய்யணும்?
![]()
சுப்ரமணியின் சுவாமி மனுவிற்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்துள்ளது. ஏற்கனவே அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை சேர்த்து இந்த மனு விசாரிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு..சூப்பர் நியூஸ்.. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ 1,000 - எப்போது கிடைக்கும் தெரியுமா?