Asianet News TamilAsianet News Tamil

அர்பன் நக்சல் பட்டியலில் சோபியாவா? விடை தெரியாத அடுக்கடுக்கான கேள்விகள்...

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சம்பவத்தின் போதே கனடாவில் வசித்த சோபியா கண்காணிக்கப்பட்டாரா? முக்கிய பட்டியலில் இருந்தா? என்பது உள்ளிட்ட விடை தெரியாத அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன.

Arban Naxal List Sophia?
Author
Tamil Nadu, First Published Sep 6, 2018, 8:43 AM IST

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சம்பவத்தின் போதே கனடாவில் வசித்த சோபியா கண்காணிக்கப்பட்டாரா? முக்கிய பட்டியலில் இருந்தாரா? என்பது உள்ளிட்ட விடை தெரியாத அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன. Arban Naxal List Sophia?

தூத்துக்குடி விமானத்தில் பாசிச பாஜக அரசு ஒழிக என முழக்கமிட்டவர் கனடாவில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வரும் மாணவி சோபியா என்பது வழக்கு. ஆனால் மாணவி சோபியா தொடர்பாக சமூக வலைதளங்களில் உடனடியாக வெளியிடப்பட்ட தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

 Arban Naxal List Sophia?


1) மாணவி சோபியா ட்விட்டர் பக்கத்தில் தாம் முழக்கமிடப்போவதாக பதிவிட்டிருந்தது அடுத்த நிமிடமே தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எப்படி தெரியவந்தது?

2) மாணவி சோபியா தி வயர் இணையதளத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கட்டுரைகளை எழுதியவர் என்கிற தகவல்கள் எப்படி உடனடியாக பாஜகவினரால் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது?

3) மாணவி சோபியா குறித்த தகவல்களை உளவுத்துறை ஏற்கனவே சேகரித்து பாஜகவினருக்கு கொடுக்காமல் இவை எப்படி சாத்தியமாகும்?

4) தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறிவைத்து கொல்லப்பட்டவர்கள் அனைவருமே ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தவர்கள். அப்படியானால் அந்த சம்பவம் நடைபெற்ற போதே கனடாவில் இருந்த சோபியா கண்காணிக்கப்பட்டாரா?

5) பாசிச பாஜக ஒழிக என முழக்கமிட்ட ஒரு காரணத்தினால் மட்டுமே சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்க முடியுமா?

6) சோபியாவின் தந்தை உடனடியாக ஜாதிய அடையாளத்தை கையில் எடுத்தது தற்செயலானதா? அல்லது நெருக்கடி கொடுத்ததால் அப்படி கூறி சமாளித்தாரா?

7) சோபியாவும் தமிழிசையும் ஒரே விமானத்தில் பயணம் மேற்கொண்டது தற்செயலானதா? அல்லது திட்டமிட்டதா?

8) சோபியாவுக்கும் வெளிநாட்டு தன்னார்வ அமைப்புகளுக்கும் தொடர்பிருக்கிறது என்கிற தகவல்களை பாஜக தேசிய செயலர் எச். ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் அக்கட்சி தொண்டர்கள் பதிவிட்டு இருப்பது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

9)  தி வயர் ஒரு இடதுசாரி ஆதரவு இணையதளம்..அதனால் தற்போது பேசப்பட்டு வரும் ‘அர்பன் நக்சல்’ பட்டியலில் சோபியாவும் சேர்க்கப்பட்டுள்ளாரா?    இப்படி விடைதெரியாத மர்ம கேள்விகள் ஏராளமாக உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios