திமுகவிற்கு ஒரு வருடத்தில் ரூ.306 கோடி நன்கொடை கொடுத்தது யார்.? அங்கே பாஜகனா.! இங்கே திமுக- அறப்போர் இயக்கம்
மத்தியில் பாஜக என்றால் மாநிலத்தில் திமுக என்று போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பத்திரம் மூலம் ரகசிய நன்கொடை என்ற மோசடி திட்டத்தால் கோடிகளை குவித்து வருகிறார்கள் என அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகள்
தேர்தல் பத்திரம் மூலம் ரகசிய நன்கொடை என்ற திட்டத்தின் கீழ் கடந்த 5 வருடங்களில் இந்திய அளவில் பாஜகவிற்கு 5272 கோடியும், காங்கிரஸ் கட்சிக்கு 952 கோடியும், திமுகவிற்கு 431 கோடியும், அதிமுகவிற்கு 6 கோடியும் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் திமுக ஆட்சியின் தவறுகளை குறைகளை பற்றி யாராவது பேசிவிட்டாலே சமூக வலைத்தளங்களில் பிளாக் செய்து விடுகிறார்கள். அல்லது நீங்க பாஜக ஆதரவு இயக்கமா என்று அலறுகிறார்கள்.
திமுக, பாஜக ரகசிய கூட்டணி
ஆனால் அந்த பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் மூலம் ரகசிய நன்கொடை என்ற இந்திய வரலாற்றின் மிக மோசமான திட்டத்தால் தமிழகத்தில் திமுக கட்சி தான் அதிக பயன் அடைந்துள்ளது என்று சொன்னால் அதை பற்றி பேச தயங்குகிறார்கள். ரகசிய நன்கொடை வாங்குவதற்காக திமுக பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைத்து இந்த மோசடி திட்டத்தை பற்றி எதிர்த்து பேசாமல் ஆதரவு கொடுக்கிறார்கள்.
ஒரே வருடத்தில் ரூ.306 கோடி நன்கொடை
அப்படி இல்லை என்றால் கடந்த வருடத்தில் திமுகவுக்கு வந்த 306 கோடி நன்கொடையை யார் கொடுத்தது என்று தைரியமாக சொல்லட்டுமே. அப்பொழுது தெரிந்துவிடும் அந்த நன்கொடையை கொடுத்தவர்களுக்கு திமுக அரசால் என்ன பயன் கிடைத்துள்ளது என்று..! மத்தியில் பாஜக என்றால் மாநிலத்தில் திமுக என்று போட்டி போட்டுக் கொண்டு இந்த மோசடி திட்டத்தால் கோடிகளை குவித்து வருகிறார்கள் என அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதையும் படியுங்கள்
தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முன்னர் அரசியல் கட்சியினர் யோசிக்க வேண்டும்- பிரேமலதா அதிரடி