அரக்கோணம் அடுத்து புளியாமங்கலத்தில் செயல்பட்டு வரும் ரயில்வே பணிமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அரக்கோணம் அடுத்த புளியாமங்கலத்தில் ரயில்வே பணிமனை செயல்பட்டு வருகிறது. அதாவது இந்த இடத்தில் ரயில் என்ஜின்களில் பழுதுகள் ஏற்பட்டால் உடனே சரிசெய்யப்படும் மையம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

இந்நிலையில் பெயிண்ட் அடிக்கும் இயந்திரமானது திடீரென வெடித்தது. இதனையடுத்து தீ மளமளவேன அனைத்து இடங்களுக்கும் பரவியது. இதனால் அங்கிருந்த பெயிண்ட் டப்பாக்கல் முழுவதும் தீ பற்றியது. இந்த விபத்தால் உடனே ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆகையால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

மேலும் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் இருக்க பணிமனையில் இருந்த 3 ரயில் என்ஜின்கள் அப்புறப்படுத்தப்பட்டன. தீ விபத்து தொடர்பாக அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீணை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.