Tamil Nadu Weather Update : தமிழகத்தில் மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது.

இந்நிலையில் அரபிக் கடலில் உருவாகி உள்ள தீவிர காற்று சுழற்சி தீவிரமடைந்து வருகிறது என்றும். இதனால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஈரோடு, நாமக்கல், சேலம், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் கேரளா மற்றும் கர்நாடகாவில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் 4ம் தேதி வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சதமடித்த சின்ன வெங்காயம்.. விலை உயர்ந்த கேரட் - கோயம்பேட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன?

Scroll to load tweet…

மேலும் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் தமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் இந்த வாரம் அதிக மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.