மதுரை ஆவினில்‌ நடந்த பணி நியமன முறைகேடு குறித்து ஆவின்‌ லஞ்ச ஒழிப்பு எஸ்‌.பி. ஜெயலட்சுமி தலைமையில்‌ நடைபெற்ற விசாரணையில், 30 நியமனங்களில்‌ முறைகேடு நடந்ததற்கான ஆவணங்கள்‌ சிக்கியுள்ளதாக தகவல்கள்‌ தற்போது வெளியாகியுள்ளன.

மதுரை ஆவினில்‌ நடந்த பணி நியமன முறைகேடு குறித்து ஆவின்‌ லஞ்ச ஒழிப்பு எஸ்‌.பி. ஜெயலட்சுமி தலைமையில்‌ நடைபெற்ற விசாரணையில், 30 நியமனங்களில்‌ முறைகேடு நடந்ததற்கான ஆவணங்கள்‌ சிக்கியுள்ளதாக தகவல்கள்‌ தற்போது வெளியாகியுள்ளன. கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் மதுரை ஆவினில் மேலாளர் உள்ளிட்ட 61 பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, பின் நேர்காணல் மூலம் நியமனம் நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக‌ தகுதி இல்லாதவர்களுக்கு பணி வழங்கியது, எழுத்துத்‌ தேர்வு வினாத்தாளை லீக்‌ செய்தது, காசோலை மோசடி, தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது உள்ளிட்ட முறைகேடுகள்‌ நடந்ததாக சர்ச்சைகள் வெடித்தன.

மேலும் படிக்க: Gobackmodi ட்ரெண்டிங்கை கூலிப்படைகள் தான் செய்கின்றன.. மோடியை வரவேற்க 1 லட்சம் பேர்.. கரு நாகராஜன்.

பின்னர் இதுக்குறித்து வழக்குபதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையிலான குழு 2 முறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல்‌ செய்தது. மேலும்‌, கூட்டுறவு சங்கங்கள்‌ சட்டம்‌ 81ன்‌ படி ஆவின்‌ துணை பதிவாளர்‌ கணேசன்‌ தலைமையில்‌
விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில்‌ லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி தலைமையில்‌ இரண்டு நாட்களாக விசாரணை தொடர்ந்தது. அதில்‌ சில ஆவணங்கள்‌ சிக்கியுள்ளதாகத்‌ தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் ஆவின் துணை பதிவாளர்‌ கணேசன்‌, முறைகேடு நடைபெற்றாக கூறப்படும் நிலையில் அந்த தேர்வில் பணி நியமனம் செய்யப்பட்ட 30க்கும்‌ மேற்பட்டோருக்கு நேரில்‌ ஆஜராக சம்மன்‌ அனுப்பியுள்ளார்‌. பணி நியமனம்‌, கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து அசல்‌ சான்றிதழ்களையும்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌ என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து தமிழக கால்நடை மற்றும்‌ பால்வளத்‌ துறை கூடுதல்‌ முதன்மைச்‌ செயலாளர்‌ ஜவகர்‌ மதுரை ஆவின்‌ லஞ்ச ஒழிப்பு விசாரணை குறித்து அதிகாரிகளிடம்‌ கேட்டறிந்தார்‌.
மேலும் படிக்க: ஓராண்டு கூட நிறைவு பெறாத நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் திடீர் மாற்றம்..!