தமிழ்நாடு அரசு கொடுக்கும் இந்த விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தலா ரூ.5 லட்சம் பரிசும் 10 கிராம் தங்கப் பதக்கம் பெறுவார்கள்.

தமிழக அரசு வழங்கும் கல்பனா சாவ்லா விருது மற்றும் சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்‌ விருது ஆகியவற்றுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து தனித்தனியாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

கல்பனா சாவ்லா விருது:

கல்பனா சாவ்லா விருது துணிவு மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்களுக்காக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும்‌ தமிழக முதலமைச்சரால்‌, சுதந்திர தின விழாவின்போது கொடுக்கப்படும் இந்த விருதில்‌, ரூ. 5 லட்சம் பணம், சான்றிதழ்‌ மற்றும்‌ தங்கப் பதக்கம்‌ ஆகியவை அடங்கும்‌. இந்த விருதுக்கு தமிழ்நாட்டைச்‌ சேர்ந்தவர்கள் மட்டுமே பெண்‌கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

2023ஆம்‌ ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்காக விண்ணப்பங்கள்‌ / பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம். அதற்கு https://awards.tn.gov.in என்ற தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பங்களைத் தரவிறக்கி, பூர்த்தி செய்து, அளிக்க வேண்டும்.

சென்னை ஆவடியில் முதல் பெண் போக்குவரத்து காவலரான சுஜிதா

அதிகபட்சம்‌ 800 வார்த்தைகளுக்கு மிகாமல்‌ விருதுக்குப் பரிந்துரைக்கும் அல்லது விண்ணப்பிக்கும் வீர தீரச் செயல்களைப் பற்றி தெளிவாகவும்‌, தேவையான அனைத்து விவரங்களுடனும் விவரிக்க வேண்டும். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்‌ 30 ஜூன்‌ 2023. இந்தத் விருதுக்குத் தகுதியானவரை அரசால்‌ நியமிக்கப்பட்ட தேர்வுக்‌ குழு முடிவு செய்யும்.

2023ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது பற்றி மேலும் விவரம் அறிய

https://awards.tn.gov.in/notify_document_upload/28/2_2023_28_Notification.pdf

அமெரிக்க ஸ்பெல்லிங் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வம்சாவளி மாணவர் தேவ் ஷா!

சிறந்த சமூக சேவகர்‌ விருது:

பெண்களின்‌ முன்னேற்றத்துற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்‌ மற்றும் தொண்டு நிறுவனத்துக்கு இந்த விருதுகள் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும்‌ சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் இந்த விருதை வழங்கி வருகிறார்.

இந்த விருதைப் பெறும் சிறந்த சமூக சேவகருக்கு 10 கிராம்‌ தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்படும். சிறந்த தொண்டு நிறுவனத்துற்கு ரூ.50,000 பணமும், 10 கிராம்‌ தங்கப் பதக்கமும் சான்றிதழும் அளிக்கப்படும்.

2023ஆம்‌ ஆண்டிற்கான சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்‌, சிறந்த தொண்டு நிறுவனம் விருதுகளுக்கான விண்ணப்பங்கள்‌ / பரிந்துரைகளை https://awards.tn.gov.in என்ற தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம். இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 10 ஜூன்‌ 2023

2023ஆம் ஆண்டுக்கான சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்‌ பற்றி மேலும் விவரம் அறிய

https://awards.tn.gov.in/notify_document_upload/32/5_2023_32_Notification.pdf