Asianet News TamilAsianet News Tamil

சென்னை ஆவடியில் முதல் பெண் போக்குவரத்து காவலரான சுஜிதா

34 வயதான சுஜிதா சென்னை ஆவடியில் முதல் பெண் போக்குவரத்து காவலர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

Chennai: Avadi gets first woman traffic inspector
Author
First Published Jun 7, 2023, 11:05 AM IST

சாலைகளில் வாகனங்களை ஒழுங்குபடுத்துவது எஸ். சுஜிதாவுக்கு புதிது. ஆனால், ஆவடி கமிஷனர் அலுவலகத்தைச் சேர்ந்த முதல் பெண் போக்குவரத்து காவலரான அவர், தகிக்கும் கோடை வெப்பம் மற்றும் ஒலி மாசுபாட்டைச் சமாளித்து, தன் பணியைக் கச்சிதமாகச் செய்து வருகிறார்.

34 வயதான அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் சுஜிதா, பாரம்பரிய முறையில் போக்குவரத்து காவலருக்கான வெள்ளை மற்றும் காக்கி ஆடைகளை அணிந்துகொண்டு, சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பிற்காக போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதாகக் கூறுகிறார். ஆவடி காவல் ஆணையர் அருண் இந்தச் சவாலாக பணியை சுஜிதாவிடம் ஒப்படைத்துள்ளார்.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முதலில் தனது அதிகார வரம்பில் உள்ள சாலைகளில் கம்பிகள் மற்றும் குழிகள் போன்ற அனைத்து தடைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உதவியுடன் அகற்றுவேன் என்று கூறுகிறார் சுஜிதா.

இனி ஜிஎஸ்டி சாலையில் டிராபிக் ஜாம் இருக்காது! நெடுஞ்சாலைத்துறை கொண்டுவரும் புதிய திட்டம்!

Chennai: Avadi gets first woman traffic inspector

"போக்குவரத்து நெரிசல் உள்ள முக்கிய இடங்களைக் கண்டறிந்து, இடையூறுகளைத் அகற்ற தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும். அதற்கு முன், U வளைவு திருப்பங்கள் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கான காரணம் என்ன என்பதை கவனிக்க வேண்டும்" என்கிறார்.

"சென்னை - திருவள்ளூர் சாலை மிகவும் சவாலானது. அங்கு அதிக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இது ஒரு தொழில்துறை பகுதி என்பதால் நாங்கள் காலையிலும் மாலையிலும் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும் பீக் ஹவர் நேரங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்கிறோம்" எனவும் சுஜிதா சொல்கிறார்.

எஞ்சின் கோளாறால் ரஷ்யாவில் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!

Chennai: Avadi gets first woman traffic inspector

"இந்த சந்திப்பில் முகமூடி அணிந்திருந்தாலும், தூசி மற்றும் காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது. ஆனால் போக்குவரத்தை நிர்வகிப்பது எங்கள் கடமை. எந்த சூழ்நிலையையும் தைரியமாக சமாளிக்க வேண்டும். இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளை நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும்" என்று சுஜிதா கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், ஹெல்மெட் அணிவது, வாகனம் ஓட்டும்போது தொலைபேசியில் பேசக்கூடாது, இருசக்கர வாகனத்தில் மூவர் பயணிப்பது, அதிவேகமாகச் செல்வது போன்றவை பற்றிய விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு செவிசாய்த்துள்ளனர் என்கிறார். "எங்கள் அணுகுமுறையால் வாகன ஓட்டிகளிடம்  நிறைய வித்தியாசத்தைக் காணமுடிகிறது என்று உணர்கிறேன்" எனவும் சுஜிதா குறிப்பிட்டுள்ளார்.

சென்னை டூ திரிகோணமலை! இலங்கைக்கு இந்தியாவின் முதல் பயணிகள் கப்பல் இயக்கம்!

Follow Us:
Download App:
  • android
  • ios