சென்னை டூ திரிகோணமலை! இலங்கைக்கு இந்தியாவின் முதல் பயணிகள் கப்பல் இயக்கம்!

சென்னையில் இருந்து இலங்கைக்கான இந்தியாவின் முதல் பயணக் கப்பல் இயக்கம் தொடங்கியுள்ளது. இந்தக் கப்பலுக்கு கோர்டேலியா எம்பிரெஸ் (Cordelia Empress) என்று பெயரிடப்பட்டுள்ளது.

First Indian cruise ship to Sri Lanka sets sail from Chennai

மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திங்கள்கிழமை சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கான இந்தியாவின் முதல் பயணக் கப்பலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோர்டேலியா எம்பிரெஸ் (Cordelia Empress) என பெயரிடப்பட்ட இந்த சொகுசு கப்பல் ஜூன் 7ஆம் தேதி இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடையும். அங்கிருந்து திரிகோணமலைக்குச் சென்று ஒரு நாள் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும். பின், ஜூன் 9ஆம் தேதி மறுமார்க்கமாக சென்னைக்குத் திரும்பும்.

அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு எதிராக மைக் பென்ஸ்... யார் இவர்?

First Indian cruise ship to Sri Lanka sets sail from Chennai

கப்பலில் ஆடம்பர ஷாப்பிங் பகுதி, பப்கள், நீச்சல் குளம், உணவு நீதிமன்றம், சூதாட்ட விடுதி, விளையாட்டு அரங்கம், ஸ்பா, திரையரங்கம் உள்ளிட்ட பல வசதிகள் இருக்கின்றன. கப்பல் இயக்கத்தைத் தொடங்கி வைத்து அமைச்சர் சர்பானந்தா சோனோவால் உரையாற்றினார்.

“நம் நாட்டில் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்துவது பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டமாகும். இதற்காக சென்னை துறைமுக ஆணையமும், தமிழக அரசின் சுற்றுலாத் துறையும் எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியவை" என்று அமைச்சர் சர்பானந்தா சோனோவால் குறிப்பிட்டார்.

டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து கொலைவெறி! 3 மாதமாக திட்டம் போட்டு கொலை ஆசையை நிறைவேற்றிய இளம்பெண்!

First Indian cruise ship to Sri Lanka sets sail from Chennai

"மும்பையில் ரூ.5,000 கோடியில் சர்வதேச கப்பல் முனையங்களை மத்திய அரசு கட்டத் தொடங்கியுள்ளது. இது விரைவில் தயாராகும்" என்றும் அமைச்சர் சோனோவால் கூறினார். இந்த கப்பல் அடுத்த நான்கு மாதங்களில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 50,000 பயணிகளை ஏற்றிச் செல்லும் என கப்பலை இயக்கும் கோர்டேலியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜூர்கன் பெய்லோம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து இலங்கைக்கு 3 நாள், 4 நாள் அல்லது 5 நாள் தங்கும் பயண வாய்ப்புகள் உள்ளன. பயணிகள் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து இந்தக் கப்பலில் சென்றுவரலாம்.

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி... ஒருசில நாட்களில் தென்மேற்கு பருவமழை ஆரம்பம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios