அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி... ஒருசில நாட்களில் தென்மேற்கு பருவமழை ஆரம்பம்!
அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டுள்ளதால் ஒருசில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் இன்னும் ஒருசில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 9ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை நோக்கி வீசும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இந்த மழைப்பொழிவு இருக்கும் என்றும் சொல்கிறது. அதே நேரத்தில், சில இடங்களில் இன்று வெப்பநிலை உயரக்கூடும் என்றும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இனி ஜிஎஸ்டி சாலையில் டிராபிக் ஜாம் இருக்காது! நெடுஞ்சாலைத்துறை கொண்டுவரும் புதிய திட்டம்!
இச்சூழலில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சிக்னலில் வேண்டுமென்றே நிகழ்ந்த தலையீட்டால் ரயில் விபத்து நடந்துள்ளது: ரயில்வே அதிகாரிகள் தகவல்
தற்போது அரபிக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் அடுத்த 3 நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கேரளா, தெற்கு கர்நாடகாவின் உள்பகுதியில் மழைப்பொழிவுக்கு அதிக வாய்ப்புள்ளது. இதைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.