Asianet News TamilAsianet News Tamil

10 மற்றும் 12ஆம் வகுப்பு துணை தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பது எவ்வாறு..? முழு விபரம்..

10 மற்றும் 12ஆம் வகுப்பு துணை தேர்வுகளுக்கு வரும் ஜூன் 27 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. 
 

Announcement of 10th and 12th class sub-examination date - how to apply.. direct link here
Author
Tamilnádu, First Published Jun 23, 2022, 12:11 PM IST

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு, ஜூலை 25 முதல் ஆக.,1 வரையிலும்; பிளஸ் 1க்கு ஆக., 2 முதல் 10 வரையிலும்; 10ம் வகுப்புக்கு ஆக.,2 முதல் 8 ஆம் தேதி வரையிலும் துணை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், துணை தேர்வு எழுத, தாங்கள் படித்த பள்ளிக்கு சென்று, வரும் 27ம் தேதி முதல் ஜூலை 4 வரை, ஞாயிறு தவிர மற்ற நாட்களில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க:பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. சிபாரிசு அடிப்படையில் சீட்.. கடும் நடவடிக்கை பாயும்.. எச்சரித்த பள்ளிக் கல்வித்துறை

பிளஸ் 1 எழுதியவர்கள் தேர்வு முடிவு வந்த பின், துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி விபரம் அறிவிக்கப்படும்.மேற்குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்காதவர்கள், ஜூலை 5 முதல் 7 வரை, கூடுதல் கட்டணம் செலுத்தி, தத்கல் சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப எண்ணை பாதுகாப்பாக வைத்திருந்து, ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க:மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 திட்டம்... ஊக்கத் தொகை பெறும் மாணவர்கள் பட்டியல் வெளியீடு..!

புதிதாக தேர்வு எழுதும் தனி தேர்வர்களும், அரசு தேர்வுத்துறையின் சேவை மையங்கள் வழியே விண்ணப்பிக்கலாம். பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கும், பிளஸ் 2வுக்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். தேர்வு அட்டவணை மற்றும் விதிமுறைகளை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios