Asianet News TamilAsianet News Tamil

பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. சிபாரிசு அடிப்படையில் சீட்.. கடும் நடவடிக்கை பாயும்.. எச்சரித்த பள்ளிக் கல்வித்துறை

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் விதி மீறல் நடப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை எச்சரித்துள்ளது.
 

Class XI admissions begin in Tamil Nadu - New Order of the School Education Department
Author
Tamilnádu, First Published Jun 23, 2022, 11:47 AM IST

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் விதி மீறல் நடப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 20 ஆம் தேதி வெளியாகின. இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 90.07 % ஆகும். கடந்த 2019 ஆம் ஆண்டை விட இது குறைவு. இதனிடையே தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்,  11 ஆம் வகுப்பு மாணவ சேர்க்கை தொடர்பாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 திட்டம்... ஊக்கத் தொகை பெறும் மாணவர்கள் பட்டியல் வெளியீடு..!

இதுக்குறித்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,” அனைத்து பள்ளிகளும், மாணவர்களின் விண்ணப்பங்களை பெற்று, கால அவகாசம் நிர்ணயித்து, அதன்பிறகே மதிப்பெண், இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்றி, தரவரிசை பட்டியல் தயாரிக்க வேண்டும். இறுதியாக, விதிகளை பின்பற்றி, மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை ஒதுக்க வேண்டும். 

மாறாக தங்களின் விருப்பத்துக்கு பாடப் பிரிவுகளை ஒதுக்குவது, சிபாரிசு அடிப்படையில், தேவையான பாடப்பிரிவுகளை வழங்குவது போன்ற விதிமீறல்கள் இருக்கக் கூடாது. இது குறித்து, புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர் சேர்க்கை குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மக்களே அலர்ட் !! தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா..? இன்று முதல் முன்பதிவு தொடக்கம்.. முழு தகவல்..

Follow Us:
Download App:
  • android
  • ios