Annamalai : நேற்று கேரளா... இன்று கர்நாடகம்.. அதிரடியாக பிரச்சார களத்தில் இறங்கிய அண்ணாமலை- பாஜகவினர் உற்சாகம்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கேரளாவில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு தற்போது கர்நாடகாவில் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
பிரச்சார களத்தில் அண்ணாமலை
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்கின்ற மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இந்த தேர்தலில் சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவானது. தமிழக தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலில் எதிர்கொண்டது. இந்த தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிட்டார்.
தமிழகம் முழுவதும் உள்ள பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையோடு தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்து நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுத்த நாளே கேரளாவில் சென்று பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
கேராளாவில் ரோட் ஷோவில் அண்ணாமலை
கேரளாவின் நடைபெற்ற பல்வேறு ரோட் ஷோக்களிலும் கலந்து கொண்டு பாஜக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்தும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கு பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து கர்நாடகா முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இருந்த போதும் கர்நாடகாவில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் மிகப்பெரிய அளவிலான வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
கர்நாடகாவில் அண்ணாமலை
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கர்நாடகாவில் மீண்டும் பிரச்சாரம் செய்ய உள்ளார் கர்நாடகா எம் பியும், அண்ணாமலையின் நண்பருமான பாஜக வேட்பாளர் தேஜஸ்விக்கு ஆதரவாக இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அண்ணாமலையின் கர்நாடகா பிரச்சாரத்தால் அங்கு பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர்