தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைவது உறுதி என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், ரஜினிகாந்த் சகோதரர் மற்றும் விஜய் குறித்த கருத்துகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார்.

DMK will win only 20 seats - Annamalai தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக 200 தொகுதிகளை இலக்காக வைத்து களப்பணியை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணியானது திமுகவை வீழ்த்த பல வியூகங்களை வகுத்து வருகிறது. இதற்கிடையே கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பொருத்தவரை பல ஆயிரம் இளைஞர்கள் கனவுகளுடன் தயாராகின்றனர். 

அதில் தமிழ் மொழியிலிருந்து 100 கேள்விகள் வேறு வேறு பாடத்திலிருந்து 100 கேள்விகள் வருகிறது. இந்த 200 கேள்விகளை கேட்கப்பட்டிருக்கக்கூடிய பல கேள்விகள் பாடத்திட்டத்திலேயே இல்லையெனவும் குற்றம்சாட்டப்படுகிறது. பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் வரும் பொழுது தான் மாணவர்களை திறமையை சோதித்துப் பார்க்க முடியும். பாடத்திட்டத்திலேயே இல்லாமல் கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்.

20 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி

தேர்தல் கள நிலவரம் தொடர்பாக திமுகவின் சர்வே குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், 20 இடங்கள் ஜெயிக்க கூடிய கட்சி எதற்காக சர்வே செய்கிறார்கள். மக்கள் மனதில் கோபம் இருக்கிறது. மக்கள் மத்தியில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற கோபம் இருக்கிறது. இதற்கு முன்பு திமுக சந்தித்த தோல்வி தெரியும். ஒரே ஒருவர் ஜெயித்தார். இரண்டு பேர் ஜெயித்தார்கள் அது யார் என்று தெரியும். அது போன்ற மோசமான தோல்வியை திமுக முன்னாள் பார்த்து இருக்கிறார்கள் அதை நோக்கித்தான் இந்த தேர்தல் போகிறது என அண்ணாமலை தெரிவித்தார். என்னதான் சர்வே எடுத்தாலும் திமுக தோல்வி உறுதி

நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்தியநராயணராவ் அண்ணாமலை புத்திசாலி அரசியலில் ஜொலிப்பார் என்றும் விஜய் அரசியலில் ஜொலிப்பது கடினம் என கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சகோதரர் கருப்பா, சிவப்பா என்ற கூட தெரியாது. அவருடைய கருத்து அதை நான் ஏற்பது ஏற்காதது தவறாக போய்விடும். பிற தலைவர்கள் இருக்கிறார்கள். விஜய் ஒரு கட்சி ஆரம்பித்து இருக்கிறார். கடுமையாக பணி செய்ய வேண்டும் என்று களத்திற்கு வந்தால் வெற்றி தோல்வி அவரது கையில் இருக்கிறது என தெரிவித்தார்.

திமுக கூட்டணி கட்சிகள் வெளியேறும்

தமிழகத்தில் ஆட்சியில் இருந்து திமுக அகற்றப்பட வேண்டும் நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம் எங்களது கூட்டணி ஜெயிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறோம். எல்லா கூட்டணிகளும் ஒரு வடிவம் பெற வேண்டும் புதிய கட்சிகள் வரவேண்டும் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியே போகும் காலமும் சூழலும் வரும்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணி முழுமையான வடிவத்தில் இருக்கும் என அண்ணாமலை தெரிவித்தார்.