Asianet News TamilAsianet News Tamil

மூச்சுக்கு முந்நூறு முறை, நான் கருணாநிதியின் மகன் என கூறும் ஸ்டாலின் அவருக்காக மன்னிப்பு கேட்பாரா.? அண்ணாமலை

பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்களை திட்டிய அமைச்சர் கண்ணப்பன், பொன்முடி மீது தமிழக காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

Annamalai has questioned whether Stalin will apologize for Karunanidhi KAK
Author
First Published Jul 12, 2024, 7:54 AM IST | Last Updated Jul 12, 2024, 7:13 AM IST

சாட்டை துரைமுருகன் கைது

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்றம் சாட்டை துரைமுருகனை விடுவித்தது. இந்த நிலையில் தமிழக காவல்துறையின் செயல்பாடுகளை விமர்சித்து  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பல ஆண்டுகளுக்கு முன்பு யாரோ எழுதிய பாடலை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திரு. சாட்டை துரைமுருகன் அவர்கள் மேடையில் பாடினார் என்பதற்காக அவரைக் கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை. அத்தோடு நில்லாமல், அந்தப் பாடலில் இடம் பெற்ற வார்த்தைக்காக, அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். 

திமுக ஆட்சியில் கொலைகாரர்கள் எல்லாம் சுதந்திரமாக செயல்படுகின்றனர்; துரைமுருகன் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்

திமுகவை விமர்சிப்பவர்கள் கைது

மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்கள், அதே வார்த்தையைப் பலமுறை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அப்போதெல்லாம் தவறாகத் தெரியாதது, தற்போது மட்டும் எப்படித் தவறானது என்பதை, வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாவது, தமிழக காவல்துறை ஆலோசித்திருக்கவேண்டும். தினமும் கொலை, கொள்ளை என, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் தத்தளித்து வரும் தமிழகத்தை, சீரான பாதையில் கொண்டு செல்ல எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், சமூக வலைத்தளங்களிலும், பொதுமேடைகளிலும் திமுகவினரை விமர்சிப்பவர்களை மட்டும் கைது செய்வது சர்வாதிகாரத்தின் உச்சம். 

அமைச்சர்கள் மீது என்ன நடவடிக்கை

பட்டியல் சமுதாயத்தைத் தவறாகப் பேசினார் என்று திரு. சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறை, பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த ஒரு அரசு அதிகாரியை, தகாத வார்த்தைகளால் திட்டிய அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதோ, பட்டியல் சமுதாய மக்கள் பிரதிநிதி ஒருவரை, பொது மேடையில் வைத்து சமுதாயத்தை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் பொன்முடி மீதோ, என்ன நடவடிக்கை எடுத்தது? போலி சமூக நீதி பேசி ஊரை ஏமாற்றும் திமுக, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்காக பட்டியல் சமூக மக்களைப் பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்த வேதாளம் வந்ததே பேய ஓட்டத்தான்.. இங்க நிறைய பேய் இருக்கு ஒன்னு ஒன்னாதான் ஓட்ட முடியும்.! அண்ணாமலை பதிலடி

ஸ்டாலின் மன்னிப்பு கேட்பாரா.?

உடனடியாக, இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை திமுக அரசு கைவிட வேண்டும் என்றும், திரு. சாட்டை துரைமுருகன் மீது தொடர்ந்துள்ள போலி வழக்கைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.உண்மையாகவே முதலமைச்சர் ஸ்டாலின்  அவர்களுக்கு, பட்டியல் சமூக மக்கள் மீது அக்கறை இருந்தால், மூச்சுக்கு முந்நூறு முறை, நான் கருணாநிதியின் மகன் என்று கூறிக்கொள்ளும் அவர், திரு. சாட்டை துரைமுருகன் பேசிய அதே வார்த்தையைப் பயன்படுத்திய அவரது தந்தை மறைந்த கருணாநிதி சார்பாக மன்னிப்பு கேட்பாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios