Asianet News TamilAsianet News Tamil

Annamalai : கோவையில் ஒரு வாக்கு சாவடியில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்ற அண்ணாமலை- பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கோவையில் வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு தொகுதியில் அண்ணாமலை ஒரே ஒரு வாக்குகள் மட்டுமே பெற்றது பாஜகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 
 

Annamalai got only one vote in a polling station in Coimbatore KAK
Author
First Published Jun 4, 2024, 11:16 AM IST | Last Updated Jun 4, 2024, 12:35 PM IST

வாக்கு எண்ணிக்கை தீவிரம்

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதில் பதிவான வாக்குகள் என்னும் பணியானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் திமுக, அதிமுக,பாஜக இடையே போட்டியானது ஏற்பட்டுள்ளது.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் தொகுதியை நாடே ஆவலோடு எதிர்பார்த்து இருந்தது. அந்த வகையில் கோவை மக்களவை தொகுதிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது அப்போது முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது திமுக,பாஜக, அதிமுக ஆகிய வேட்பாளர்கள் மாறி மாறி வாக்குகளை பெற்று வந்தனர்.

Annamalai got only one vote in a polling station in Coimbatore KAK

 இதில் ஒரு வாக்குச்சாவடியில் மொத்தம் 312 வாக்குகள் பதிவாகி இருந்தது. அந்த 312 வாக்குகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 165 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிங்கே இராமச்சந்திரன் 24 வாக்குகளும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  ஒரே ஒரு வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். மற்ற வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே அண்ணாமலை பெற்றிருந்தி நிலையில் ஒரு வாக்குச்சாவடியில் வெறும் ஒரே ஒரு வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது பாஜக நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்தது. இதனிடையே பாஜக வேட்பாளர் அண்ணாமலையை விட திமுக வேட்பாளர் 15ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

Sowmiya Anbumani: தருமபுரி தொகுதியில் மாம்பழம் பழுக்குமா.? சவுமியா அன்புமணியின் வாக்கு,முன்னிலை நிலவரம் என்ன.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios