Asianet News TamilAsianet News Tamil

ஆறு வயது பட்டியலின சிறுவன் மீது தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்!

ஆறு வயது பட்டியலின சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

Annamalai condemned six year old dalit boy attacked in madurai smp
Author
First Published Nov 29, 2023, 11:48 AM IST | Last Updated Nov 29, 2023, 11:48 AM IST

மதுரை பெருங்குடியில் ஆறு வயது சிறுவன் உள்பட பட்டியலின சமூகத்தை சேர்ந்த 5 பேர் மீது சாதிய கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தாக்குதல் நடத்திய இருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆறு வயது பட்டியலின சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

17 நாட்கள்... திக் திக் நிமிடங்கள்: சுரங்கத்தினுள் எப்படி இருந்தோம்: விவரிக்கும் தொழிலாளர்கள்!

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “மதுரை மாவட்டம் பெருங்குடியில், பட்டியல் சமூக மக்கள் ஐந்து பேரை ஆயுதத்தால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஆறு வயது சிறுவன் ஒருவரும் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. 

 

 

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை அதிகரித்து வருவது கண்கூடு. வாக்கு அரசியலுக்காக, குற்றவாளிகளுக்கு எதிராக எந்தக் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்காமல், தொடர்ந்து சமூகங்களுக்கிடையே விரோதத்தை மறைமுகமாக ஊக்குவித்து வருகிறது திமுக அரசு. இதனால் பாதிக்கப்படுவது அனைத்து சமூகங்களையும் சேர்ந்த சாதாரண பொதுமக்களே என்பதை முதலமைச்சர் உணர வேண்டும்.

பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான இது போன்ற குற்றச் சம்பவங்களை திமுக அரசு கண்டும் காணாதது போல் இருப்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இனியும் இது போன்ற குற்றங்கள் நடக்காமல், கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.” இஇவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios