நாளை வெளியாகிறது டான்செட் தேர்வு முடிவுகள்... அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம்!!
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய டான்செட் தேர்வு 2023 முடிவுகள் நாளை காலை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய டான்செட் தேர்வு 2023 முடிவுகள் நாளை காலை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 2023 ஆம் ஆண்டிற்கான MBA, MCA, ME/M Tech, போன்ற படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான டான்செட் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த பிப்.1 ஆம் தேதி முதல் இத்தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டது.
இதையும் படிங்க: காவிரியாற்றில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு... தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!
அதைத் தொடர்ந்து இந்த தேர்வானது மார்ச் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த நிலையில், டான்செட் 2023 தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் 14 ஆம் தேதியான நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான Scorecard-ஐ ஏப்.20 முதல் மே.20 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புத்தாண்டு, தொடர் விடுமுறை; அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பதிவிறக்கம் செய்வது எப்படி?
- முதலில், tancet.annauniv.edu என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில், நுழைவுத் தேர்வு முடிவு என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
- மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல் போன்றவற்றை பதிவிட வேண்டும்.
- பின்னர், ‘Get Scorecard’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன்பின்னர், SCORE CARD-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.