காவிரியாற்றில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு... தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!

மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 கால்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

cm stalin announced 2 lakhs for families of college students who drowned in cauvery river

மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 கால்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சேலம் எடப்பாடி அடுத்த கல்வடங்கம் கிராமத்தில் கல்லூரி மாணவர்கள் 10 பேர் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அவர்களில்  4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இதுக்குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மாணவர்களின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மது போதையில் பெற்ற மகள்களுக்கு தீ வைத்த போதை ஆசாமி தற்கொலை; சிறுமிகள் படுகாயம்

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுக்குறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுக்குறித்து அவர் வெளியிடப்பட்ட அறிக்கையில், சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகாவில் உள்ள கல்வடங்கம் கிராமத்தில் செல்லும் காவிரி ஆற்றில் இன்று குளிக்கச் சென்ற தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள்  மணிகண்டன், முத்துசாமி, மணிகண்டன், பாண்டியராஜன் ஆகியோர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

இதையும் படிங்க: புத்தாண்டு, தொடர் விடுமுறை; அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios