முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரொனோ பரவல் காரணமாக இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்கள அனைவருக்கும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர் கல்வித்துறை அறிவித்திருந்தது. இதை அடுத்து பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணையை அண்மையில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதன்படி, காலை மாலை என இருவேளைகளில் தேர்வு வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மார்ச் வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே எழுதலாம். அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் இறுதியாக படித்த கல்லூரிகளை தொடர்பு கொண்டு தேர்வுக்கான அனுமதிச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கு கூகுள் கிளாஸ்ரூம் அல்லது மின்னஞ்சல் வழியாக வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்படும். தேர்வு எழுதிய வினாத்தாள்களை மின்னஞ்சல் அல்லது கூரியர் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விடைத்தாள்களில் பதிவு எண், பெயர், பாட குறியீடு, பாடத்தின் பெயர் உள்ளிட்டவற்றை வினாத்தாளின் ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிட வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அன்று நடைபெற தேர்வுகளை மார்ச் மாதத்திற்கு ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டது.

அதன்படி பிப்ரவரி 19 ஆம் தேதியன்று நடைபெற இருந்த பொறியியல் மாணவர்கள் முறையே மார்ச் மாதம் 5, 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையில் 26 நாட்களுக்கும் மேலாக தேர்வுக்கான விடுப்பு வழங்கப்பட்ட நிலையில் இன்று முதல் கல்லூரிகள் செயல்பட்டு இணையவழி தேர்வு தொடங்கியது. இந்நிலையில், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்ட முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடைபெறும் எனவும், பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பிறகு அட்டவணை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அமைச்சர் பொன்முடி அறிவிப்புக்கு மாறாக அண்ணாபல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.